செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கிளி மாதிரி பொண்டாட்டி இருக்க குரங்கு மாதிரி உறவை தேடிய நடிகர்.. கடைசியில் கள்ளக்காதலி வைத்த ஆப்பு

என்னதான் கிளி மாதிரி பொண்டாட்டி வீட்டில் இருந்தாலும் குறுக்கு புத்தியோடு இருக்கும் கணவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அப்படித்தான் பிரபல நடிகர் ஒருவர் டாப் ஹீரோயினை ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்வு சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. அதற்கு காரணம் நடிகை தான் என்று கூட பேசப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த நடிகர் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு நடிகையுடன் கள்ள உறவில் இருந்திருக்கிறார்.

Also read: அனுபவிக்க துடித்த இயக்குனர்.. எஸ்கேப் ஆன ஓமனக்குட்டி, பொறி வைத்து பிடித்து காரியத்தை சாதித்த சங்கதி

இந்த விஷயம் தெரிந்ததால் தான் அந்த நடிகை விவாகரத்து என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதை தொடர்ந்து தொல்லை விட்டது என அந்த நடிகரும் தன் காதலியுடன் ஊரறிய ஊர் சுற்றி வந்தார். ஆனால் கர்மா திருப்பி அடிக்கும் என்பது போல் ஆகி இருக்கிறது நடிகரின் நிலைமை.

அதாவது நடிகரின் கள்ள காதலியான அந்த நடிகை அக்கட தேசத்தில் வாய்ப்பு வேண்டும் என்பதற்காக வேறு ஒரு நடிகரிடம் நெருங்கி பழகி வருகிறாராம். அதன் காரணமாக தற்போது இந்த நடிகரையும் அவர் கழட்டி விட்டு விட்டாராம். இதை எதிர்பார்க்காத நடிகர் தான் இப்போது நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறார்.

Also read: இளம் நடிகையை வேட்டையாடிய பிரபல அரசியல்வாதி.. பணத்துக்காக சரண்டர் ஆன பிரியமான நடிகை

மனைவிக்கு செய்த துரோகம் தான் இப்படி அவரை திருப்பி அடித்திருக்கிறது. ஆனாலும் திருந்தாத அந்த நடிகர் இப்போது விவாகரத்தான இன்னொரு நடிகையின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறாராம். இது எத்தனை நாளைக்கு என்று தான் தெரியவில்லை என திரை உலக வட்டாரம் சத்தம் இல்லாமல் கிசுகிசுத்து வருகிறது.

Trending News