சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ பிரபலம் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் கோலிவுட்!

2019ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீவஸ்தவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது திரையுலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இவர் யூடியூபில் ஒளிபரப்பாகி வரும் ‘வல்லமை தாராயோ’ என்ற வலைத் தொடரில் நடித்து பிரபலமாகி வருகிறார். இந்த சூழலில் இவருடைய மரணம் அவருடைய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

dhanush-enai-nokki-payum-thota
dhanush-enai-nokki-payum-thota

இவர் கடந்த புதன்கிழமை படப்பிடிப்புக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட பின், அன்று முழுவதும் வீடு திரும்பவில்லை. வழக்கமாக ஸ்ரீவஸ்தவ் தனது சூட்டிங் நேரத்தில் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுவாராம்.

ஆகையால் தங்களுடைய மகன் படப்பிடிப்பில் இருப்பதாக அவருடைய பெற்றோர் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஸ்ரீவஸ்தவ் குடியிருந்த வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

Enai-Noki-Paayum-Thota-actor

அதன்பின் போலீஸ் நடத்திய விசாரணையில் சில மாதங்களாகவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவஸ்தவ், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

மேலும் அவருடைய தற்கொலை குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அவருடைய மறைவு திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News