Gossip: சர்வதேச அளவில் மாஸ் காட்டி வந்த அந்த நடிகர் இப்போது பெரும் அவமானத்தில் இருக்கிறார். அந்த அரசியல் பிரபலம் தான் வாய்ப்பு கிடைத்ததும் பழிவாங்கி விட்டதாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது வெற்றிப்பட ஹீரோவாக வலம் வரும் அந்த நடிகர் சமீபத்தில் ஒரு பிரச்சனையில் மாட்டினார். எப்போதுடா அவர் சிக்குவார் வச்சி செய்யலாம் என காத்திருந்தார் அந்த அரசியல் பிரபலம்.
இந்த விவகாரம் தொக்கா கிடைத்ததில் விஷயமும் சீரியஸ் ஆனது. அதை ஊதி பெரிதாக்கி அரசியல் பலத்தை வைத்து அந்த நடிகர் ஹீரோவை பழிவாங்கி இருக்கிறார்.
இப்படி ஒரு அவமானத்தை சந்தித்திராத நடிகர் இப்போது கடும் கோபத்தில் இருக்கிறாராம். ஏற்கனவே சினிமாவில் இந்த இரு நடிகர்களுக்குள்ளும் பயங்கர போட்டி இருந்தது.
நடிகரை பழிவாங்கிய அரசியல் பிரபலம்
ஆனால் மூத்த நடிகர் அரசியலுக்கு வந்து இப்போது முக்கிய பதவியிலும் அமர்ந்து விட்டார். இருப்பினும் இவர்களுக்குள் ஒரு புகைச்சல் இருக்கிறதாம்.
அதிலும் இந்த விவகாரம் பெரிதானதால் காயம் பட்ட ஹீரோ தற்போது அரசியலில் குதிக்க முடிவு செய்திருக்கிறாராம். எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்று நெருங்கியவர்கள் அறிவுரை கூறியிருக்கின்றனர்.
ஆனால் வெறி கொண்ட வேங்கையாக இருக்கும் நடிகர் விரைவில் நினைத்ததை செய்வார் என்கின்றனர். இதெல்லாம் எங்க போய் முடிய போகிறதோ என திரை உலகில் இப்போது கிசுகிசுத்து வருகின்றனர்.