சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

பாலச்சந்தரின் மற்றுமொரு படைப்பு.. ரீஎன்ட்ரியில் வில்லனாய் கலக்கும் இதயம் முரளியின் நண்பர்

80 களிலேயே சினிமாவில் நுழைந்து தற்போது வரை தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகர் ஒருவர். ஆனாலும் இவரது படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆரம்பத்தில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் நடுவில் மிகப்பெரிய பிரேக் எடுத்துவிட்டார்.

அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு இவர் வாழ்வில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. அதாவது அந்த ஆண்டு வெளியான படங்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் எல்லாமே பெரிய அளவில் பேசப்பட்டது. பெரும்பாலும் இவர் மலையாள படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜி எம் சுந்தர். இவர் அதர்மம் படத்தில் முரளியின் நண்பராக எல்லாரையும் கவர்ந்தார். பழைய படங்களில் நண்பர் கதாபாத்திரத்தில் கலக்கியவர் 2005 தொட்டி ஜெயா படத்திற்கு பின் சினிமாவை விட்டுவிலகினார்.

அதன்பின் சில படங்களில் தலை காட்டினாலும் அவருக்கென்று பெயர் வாங்கித் தரும் கதாபாத்திரங்கள் அமையவில்லை. ஆனால் கடந்த ஆண்டு சார்பட்டா பரம்பரை, மண்டேலா, ரைட்டர் போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதிலும் சார்பட்டா பரம்பரை படத்தில் இவரது துரைக்கண்ணு வாத்தியார் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. சுந்தர் தொடர்ந்து வித்தியாசமான வில்லனாக கலக்கி வருகிறார். மேலும் அஜித்தின் வலிமை படத்திலும் ஐஜி அரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது அஜித்துடன் பணியாற்றிய சுவாரசியமான விஷயங்களை சுந்தர் பகிர்ந்து கொண்டார்.

GM sundar

இவரது பேட்டிகள் இணையத்தில் வைரலாக பரவியது. மேலும் ஜிஎம் சுந்தரின் சினிமா வாழ்க்கை மிக நீளமாக இருந்தாலும் சமீபத்தில்தான் மிகவும் பிரபலமாகியுள்ளார். மேலும் தொடர்ந்து இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் சுந்தரை பார்க்க ரசிகர்கள் விரும்புகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News