Gossip: வாரிசு நடிகர் நீண்ட நாள் காதலியை தற்போது கரம் பிடித்துள்ளார். கோலாகலமாக திருமணம் நடந்த நிலையில் புது பெண் இப்போது சொல்ல முடியாத கஷ்டத்தில் இருக்கிறாராம்.
பெரிய குடும்பத்தில் வாக்கப்பட போகிறோம் என கொண்டாட்டத்தில் இருந்தார் அந்த நடிகை. ஆனால் இப்போது கணவர் போடும் கண்டிஷனை கேட்டு விழி பிதுங்குகிறதாம்.
ஏற்கனவே இந்த நடிகரின் முதல் மனைவி இப்படிப்பட்ட காரணத்தினால் தான் விவாகரத்து பெற்று பிரிந்தார். ஆனால் நடிகை அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் வாரிசு நடிகரை மணந்து கொண்டார்.
மீண்டும் வேலையை காட்டிய வாரிசு நடிகர்
இப்போது நடிகையின் முதல் காதல் விஷயமும் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விஷயமும் கணவருக்கு தெரிய வந்திருக்கிறது. அதுதான் இந்த கண்டிஷனுக்கு காரணமாம்.
இனிமேல் படத்தில் கிளாமராக நடிக்க கூடாது நெருக்கமான காட்சிகளில் நடிக்க கூடாது என ஏகப்பட்ட கண்டிஷனாம். அதேபோல் முன்னாள் காதலர் பற்றியும் கேள்விகளை கேட்டு நோகடிக்கிறாராம் வாரிசு நடிகர்.
ஏற்கனவே இந்த ஜோடியின் திருமணம் நீடிக்காது என ஜோசியர் ஒரு குண்டை போட்டார். தற்போது கசிந்திருக்கும் தகவலை பார்த்தால் அது நடந்து விடுமோ என திரை உலகில் கிசுகிசுத்து வருகின்றனர்.