சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

மசாஜ் செய்து நடிகையை கரெக்ட் செய்த நடிகர்.. சித்து விளையாட்டு பலிக்காததால் வாங்கிய அறை

மங்களகரமான பெயருடன் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் அந்த நடிகை. முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்தது. அதில் அவர் துரு துரு நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார். எப்போதுமே சக நடிகைகளிடம் லீலையை காட்டும் அந்த நடிகர் இந்த நடிகையிடமும் தன் விளையாட்டை ஆரம்பித்து இருக்கிறார்.

ஆனால் நடிகரின் முயற்சி பலிக்கவில்லை. இருந்தாலும் அவர் நடிகையுடன் சகஜமாக பழகுவது போல் நெருங்கி இருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் நடிகை முதுகு வலியினால் ரொம்பவும் அவதிப்பட்டு இருக்கிறார். உடனே நடிகர் மசாஜ் செய்வதாக கூறி நடிகையிடம் நெருங்கி இருக்கிறார்.

Also read: சீரியல்ல தான் குடும்ப குத்து விளக்கு.. ஆடம்பர வாழ்க்கைக்காக பலான ரூட்டுக்கு சென்ற நடிகை

இது சில நாட்கள் நீடிக்க நடிகையும் நடிகரின் வலையில் சிக்கி இருக்கிறார். பின் இருவரும் சில காலங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் நடிகர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது நடிகைக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் கோபம் அடைந்த அவர் நடிகரிடம் நியாயம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நடிகர் கூலாக எனக்கு உன் மேல் காதல் எல்லாம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.

இதனால் வெறுத்துப்போன அந்த நடிகை சினிமாவிலும் கவனம் செலுத்த முடியாமல் தடுமாற ஆரம்பித்தார். மேலும் இந்த காதல் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நடிகை தற்போது 40 வயது கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது இப்படி இருக்க நடிகரின் சேட்டையும் நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது.

Also read: பல பேருடன் உறவில் இருந்த நடிகையை காதலித்த ஹீரோ.. பதறிப்போய் பெற்றோர் வைத்த செய்வினை

தன்னுடன் பழகும் நடிகைகளை எல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் கரெக்ட் செய்த நடிகர் போல்டான நடிகையிடமும் தன் வேலையை காட்டி இருக்கிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் தைரியமான பெண்ணாக இருக்கும் அந்த நடிகை நடிகருக்கு சரியான பாடம் புகட்டி இருக்கிறார். அதாவது நடிகர் அந்த நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார்.

உடனே பத்ரகாளியாக மாறிய நடிகை பளார் என்று ஒரு அறை விட்டிருக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நடிகர் அதன் பிறகு நடிகையின் பக்கமே தலைவைத்து கூட படுப்பதில்லையாம். இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகர் சில காலம் சத்தம் இல்லாமல் தன் வேலையை மட்டுமே பார்த்தாராம். தற்போது அந்த நடிகருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் படித்த படிப்புக்கான வேலையை பார்த்து வருவது கூடுதல் தகவல்.

Also read: 8 வயது மகளிடம் அத்துமீறிய காமுகன்.. அப்பாவால் 7 வருடம் சித்ரவதை அனுபவித்த பூ நடிகை

Trending News