வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தேவையில்லாத பழக்கத்தால் உடம்பை கெடுத்துக் கொண்ட நடிகர்.. தயாரிப்பாளர் தலையில் விழுந்த இடி

பெண்களின் கனவு நாயகனாக இருக்கும் அந்த நடிகரின் போக்கு சமீப காலமாக சரியில்லையாம். புகழ் போதையில் இருக்கும் அவர் தேவையில்லாத பழக்கங்களால் உடம்பை கெடுத்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது.

இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த அந்த படத்திற்கு பிறகு நடிகருக்கு கொஞ்சம் போதாத காலம் தான். ஆனாலும் தட்டு தடுமாறி கடந்த வருடம் எப்படியோ ஒரு ஹிட்டை கொடுத்துவிட்டார்.

அதையடுத்து இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் வேற லெவலில் வியாபாரம் ஆகி வருகிறது. ஆனால் நடிகரால் தயாரிப்பாளருக்கு தான் ஏகப்பட்ட செலவாம்.

அதாவது நடிகர் சூட்டிங் ஸ்பாட்டில் கூட ரயில் இன்ஜின் போல் புகை விட்ட கதியாக தான் இருக்கிறாராம். அதேபோல் மதுவுக்கும் அடிமையாகி விட்டார்.

இது இரண்டும் இல்லாமல் இப்போது நடிகரே கிடையாது என்னும் அளவுக்கு அவர் மாறிப் போய்விட்டாராம். ஏற்கனவே அந்த பட ஹீரோயின் உடன் இவர் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது கசிந்து இருக்கும் இந்த விஷயம் தான் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் ஓவர் வெயிட் போட்டு விட்டதால் உடம்பை சிக்கென காண்பிக்க தயாரிப்பு தரப்பு ஏகப்பட்ட செலவு செய்திருக்கிறதாம்.

இதனால் நொந்து போன மேலிடம் இனிமேல் நடிகரை வைத்து படம் எடுக்கக் கூடாது என்ற முடிவுக்கே வந்து விட்டார்களாம். இப்படியே போனால் நடிகரின் மார்க்கெட் அதோகதி தான் என திரையுலக வட்டாரம் கிசுகிசுத்து வருகிறது.

Trending News