ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கெஞ்சினால் மிஞ்சிய மனைவி.. மொத்தமாக டாட்டா காட்ட முடிவு செய்த நடிகர்

Gossip: ஆரம்ப காலகட்டத்தில் அந்த நடிகரை பற்றி சில கிசுகிசுக்கள் வந்திருக்கிறது. ஆனால் திருமணத்திற்கு பிறகு எந்த சர்ச்சையிலும் அவர் சிக்காமல் இருந்தார். அதெல்லாம் சில காலம் வரை தான்.

எப்போது அந்த நடிகையுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தாரோ அதிலிருந்தே பிரச்சனை தான். ஜாடை மாடையாக இவர்களைப் பற்றி திரையுலகில் பேசி வந்த நிலையில் மனைவியின் காதுக்கும் இந்த விவகாரம் சென்றிருக்கிறது.

அதனால் அந்த நடிகையுடன் நடிக்கவே கூடாது என கணவருக்கு அவர் கண்டிஷன் போட்டார். நடிகரும் நல்ல பிள்ளையாக தன் வேலையை மட்டும் பார்த்து வந்தார். ஆனால் திடீரென குடும்பத்தில் மீண்டும் நடிகையால் ஒரு குழப்பம் ஏற்பட்டது.

மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிரபல ஹீரோ.?

இதற்கு மேலும் கணவரை மாற்ற முடியாது என நினைத்த மனைவி சொந்த ஊருக்கே சென்றுவிட்டார். ஆனாலும் நடிகர் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வரும் முயற்சியில் இருந்தார். அதற்கெல்லாம் மனைவி மசியவே இல்லை.

இப்படி கெஞ்சினால் மிஞ்சிய மனைவிக்கு தற்போது டாட்டா காட்டும் முடிவுக்கு வந்து விட்டாராம் நடிகர். இதற்கும் காரணம் அந்த நடிகை தான். ஏதேதோ பேசி நடிகரை தன் மாய வலையில் விழ வைத்த நடிகை மொத்தமாக கண்ட்ரோல் செய்து வருகிறாராம்.

ஹீரோவும் அந்த மயக்கத்தில் இருப்பதால் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். ஆனால் இது அவருக்கு நிச்சயமாக பின்விளைவை தான் ஏற்படுத்தும் என்கிறது திரையுலக வட்டாரம்.

நடிகையின் மயக்கத்தில் இருக்கும் நடிகர்

Trending News