புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சேச்சி நடிகைகளின் மீது கண் வைத்த ஹீரோ.. தயாரிப்பாளர்களிடம் அடம் பிடிக்க இப்படி ஒரு காரணமா

Gossip: இயக்குனராகவும் ஹீரோவாகவும் இருக்கும் அந்த சர்ச்சை நடிகர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்த படங்கள் அவருக்கு ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்கள் அவரை புக் செய்ய ரொம்ப ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த சமயத்தில் சம்பாதித்தால் தான் உண்டு என நடிகரும் வாய்ப்புகளை ஏற்று நடித்து வருகிறார். ஆனால் அவர் தயாரிப்பாளர்களிடம் போடும் ஒரே கண்டிஷன் ஹீரோயின் மலையாள நடிகையாக இருக்க வேண்டும் என்பதுதான்.

திடீரென நடிகர் எதற்கு இப்படி சொல்கிறார் என ஆராய்ந்ததில் ஒரு விஷயம் பிடிப்பட்டிருக்கிறது. அதாவது மலையாள நடிகைகள் என்றால் சூட்டிங் ஸ்பாட்டுக்கு துணைக்கு யாரையும் அழைத்து வருவதில்லை.

மலையாள நடிகைகளை கேட்டு அடம் பிடிக்கும் ஹீரோ

பக்கத்து மாநிலத்திலிருந்து வரவேண்டும் என்பதால் தனியாகவே வந்து நடித்துவிட்டு சென்று விடுகிறார்களாம். ஆனால் இங்கிருக்கும் நடிகைகள் துணைக்கு அப்பா அம்மா யாரையாவது அழைத்து வருகிறார்கள்.

இது ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும்போது நடிகருக்கு அசௌகரியமாக இருக்கிறதாம். அதனாலேயே பிளான் போட்டு கேரளத்து பைங்கிளி தான் வேண்டும் என அவர் கண்டிஷன் போட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது.

அதற்கேற்றார் போல் நடிகரின் சமீபத்திய ஹீரோயின்கள் மலையாள சேச்சிகள் தான். ஏற்கனவே நடிகர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் இருக்கும் நிலையில் இந்த விவகாரமும் கோடம்பாக்கத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Trending News