செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விவேக் இறந்த பின் வாய்ப்பை இழந்த செல்முருகன்.. கேவி ஆனந்த் மறைவுக்குப் பிறகு காணாமல் போன நடிகர்

சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் தமிழ் சினிமாவின் ஒரு ஆளுமை விவேக். ரஜினி தொடங்கி தற்போது உள்ள இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் படம் வரை விவேக் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தான் இறக்கும் போது கூட தி லெஜன்ட் அண்ணாச்சி படத்தில் நடித்து வந்தார்.

இவருடைய இழப்பு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பாக அமைந்தது. இந்த சூழலில் விவேக் நடிக்கும் பெரும்பான்மையான படங்களில் அவருடன் நடிகர் செல்முருகன் நடித்திருப்பார். விவேக்கின் மறைவுக்குப் பிறகு இவரால் மற்ற படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போனது.

Also Read : சாப்பாட்டுக்கு கூட காசு இல்ல, தங்க டாலரை பரிசளித்த நடிகர்.. கலாமிற்கு பின் விவேக்கே வியந்து பார்த்த ஒரே மனிதர்

இதனால் தற்போது படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு அங்கும் இங்கும் சுற்றித் தெரிகிறார். அதேபோல் இயக்குனர் கேவி ஆனந்த் இழப்புக்கு பிறகு ஒரு நடிகர் வாய்ப்பில்லாமல் இதே போல் தவித்து வருகிறார். விஜய் டிவியின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் நடிகர் ஜெகன்.

இவர் நக்கல், நையாண்டி உடன் பேசக்கூடியவர். விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் முழுக்க முழு நகைச்சுவையாக இருக்கும். விஜய் டிவியில் கடவுள் பாதி மிருகம் பாதி, கனெக்சன், கிங் குயின் ஜாக் போன்ற நிகழ்ச்சிகளை ஜெகன் தொகுத்து வழங்கி உள்ளார்.

Also Read : கெஞ்சி கதறியும் இரக்கம் காட்டாத கமல்.. பெரும் நஷ்டத்தை சந்தித்த விவேக்

இந்நிலையில் ஜெகன் அயன், கோ, அனேகன் என கேவி ஆனந்த் இயக்கிய பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக சவாலே சமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கேவி ஆனந்த இறப்புக்குப் பிறகு இவரை படங்களில் பார்க்க முடிவதில்லை.

இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இவ்வாறு ஒருத்தரை சார்ந்து உள்ளவர்கள் அவர்களின் இழப்பு தாங்க முடியாமல் அதிலிருந்து மீண்டு வர கஷ்டப்படுகிறார்கள்.

Also Read : கடைசிவரை ஏங்க வைத்த கேவி ஆனந்த்.. கேள்விக்குறியான 3 படங்கள்

Trending News