வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினிக்கு குடைச்சல் கொடுத்த நடிகர்.. 30 வருடமாய் காத்திருந்து கெஞ்சி கேட்டு ஜெயிலரில் பெற்ற வாய்ப்பு

Actor Rajini: சிவராஜ்குமார், மோகன்லால் போன்ற பிரபலங்களுடன், ரஜினி நடிப்பில் மக்களால் கொண்டாடப்பட்டு வரும் படம் தான் ஜெயிலர். இந்நிலையில் இப்படத்தில் நடித்தே தீர வேண்டும் என கெஞ்சி வாய்ப்பு பெற்ற நடிகர் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமாவில் இன்று வரை தனக்கான ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொள்ளாமல் இருந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் சரவணன். 90 காலகட்டத்தில் பொண்டாட்டிய ராஜ்ஜியம் என்னும் படத்தில் ஹீரோவாய் அறிமுகமானவர்.

Also Read: கணவன் இறப்பு, நடுத்தெருவுக்கு வந்த காமெடி நடிகரின் குடும்பம்.. கண்டுகொள்ளாத சிவகார்த்திகேயன், சூரி

அதன் பின் பல படங்களில் இடம்பெற்றிருந்தாலும், தான் ஏற்ற கதாபாத்திரங்களால் பெரிதாக பேசப்படாத நிலையில், சினிமா வாய்ப்பே வேண்டாம் என ஒதுங்கி இருந்து அதன்பின் கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்று வந்தார். அவ்வாறு படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் அவ்வப்போது தலைக்காட்டி வந்த இவர் தனக்கான அங்கீகாரத்தை இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் எப்படியாவது சாதித்து விட வேண்டும் என இவர் போட்ட முயற்சி அனைத்தும் தோல்வியையே கொடுத்தது. இந்நிலையில் பருத்திவீரன் படத்தில் கார்த்தி உடன் இவர் மேற்கொண்ட சித்தப்பு கதாபாத்திரம் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து எப்படியும் சினிமாவில் பெயரை பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இவர் மேற்கொண்ட படங்கள் பெருதளவு கை கொடுக்கவில்லை.

Also Read: ஜெயிலர் வர்மனை விட 10 மடங்கு டேஞ்சரான விசுவாசிகள்.. மனித உயிரை காவு வாங்கும் விநாயகனின் வளர்ப்பு

அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வாய்ப்பு தேடி பிக்பாஸில் பங்கேற்றார். இருப்பினும் இவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினியின் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்பது இவரின் கனவாம். அதன் பின்பு எதைப்பற்றியும் யோசிக்காமல் நெல்சன் இடம் ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கேட்டாராம்.

அப்பொழுது உங்களுக்கான வாய்ப்பு இல்லை எனவும் புறக்கணிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் எனக்கு படத்தில் கதை முக்கியமில்லை அவர் படத்தில் நடித்தால் மட்டும் போதும் என கெஞ்சி கேட்டு இத்தகைய வாய்ப்பை பெற்றாராம். தற்பொழுது 30 வருட கனவு இப்படத்தில் நிறைவேறியதாகவும், உலகமே போற்றும் இப்படத்தில் தலைவருடன் நடித்ததே போதும் என நிகழ்ந்து வருகிறார் சரவணன்.

Also Read: ஜெயிலரால் வேகம் எடுக்கும் ரஜினி, ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. சிக்கலில் மாட்ட போகும் விஜய்

Trending News