ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

மீண்டும் பற்றி எரியும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து.. விஜய்யை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகர்

சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தின் மேல் வளர்ந்து வரும் நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கிறது. அதை சிலர் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றனர். ஆனால் சில நடிகர்கள் அந்த ஆசையை வெளிப்படையாக காட்டுகின்றனர். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கிளம்பிய பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது.

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேசியிருந்தார்கள். அதை தொடர்ந்து ஒரு சினிமா விமர்சகர் கூட இப்படி பேசி இருந்தார். இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் மட்டும் தான். அது எங்கள் தலைவர் ரஜினி மட்டும் தான் என்று குரல் எழுப்பி வந்தனர்.

Also read: ரஜினிக்காக தனுஷ் எழுதிய கதை.. உப்புசப்பு இல்லாததால் நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்

அதன் பிறகு இந்த சர்ச்சை ஒரு வழியாக மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று பாலிவுட் பிரபலம் ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹிந்தி திரை உலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் ரன்பீர் கபூர் அஜித் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து உள்ளார்.

அதில் அஜித் ஒரு சிறந்த மனிதர் என்றும் அவரை திரைப்படங்களில் மட்டும் தான் பார்க்க முடியும். மற்றபடி வேறு எதிலும் அவர் கலந்து கொள்வது கிடையாது. அவருடைய புகைப்படங்களை கூட அவ்வளவாக பார்க்க முடிவதில்லை. சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் ஒருவர் இதுபோன்று சிம்பிளாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

Also read: ஏகே 62 வாய்ப்புக்காக போட்டி போடும் நடிகைகள்.. தீயாய் வேலை செய்யும் வாரிசு நடிகை

மேலும் அவர்தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றும் புகழ்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதையும் தாண்டி அவருடைய இந்த குணங்கள் எனக்கு பிடித்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விஷயம் தான் சோசியல் மீடியாவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நடந்த பிரச்சினையால் உக்கிரமாக இருந்த ரஜினி ரசிகர்கள் இப்போது கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

அந்த வகையில் ரன்பீர் கபூர் தெரிவித்த இந்த கருத்துக்கு எதிராக ரசிகர்கள் கமெண்ட்டுகளை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் சமீப காலமாக அஜித்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பரவி வருவதை கூறி, ரன்பீர் சோசியல் மீடியாவை கவனிப்பதில்லையா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். தற்போது இந்த விஷயம் முடிந்து போன சூப்பர் ஸ்டார் பிரச்சனையை மீண்டும் கிளறிய கதையாக மாறி இருக்கிறது.

Also read: ஆன்மீக ரீதியாக தனுசுக்கு வானிங் கொடுத்த ரஜினி.. கேட்காமல் செய்த வேலையால் சுக்குநூறாக நொறுங்கிய குடும்பம்

Trending News