வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

மாவீரன், ஜெயிலர் படத்தால் அடித்த லக்.. டாப் ஹீரோக்களின் பேவரைட்டாக மாறிய நடிகருக்கு கைவசம் குவியும் படங்கள்

Jailer: ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நடித்து விட்டாலே அந்த நடிகரை தேடி ஒட்டு மொத்த இயக்குனர்களும் குவிந்து விடுவார்கள். அப்படி இருக்கும் போது ஒரு பிரபலம் அடுத்தடுத்து இரண்டு பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படங்களில் நடித்தால் சொல்லவா வேண்டும். அப்படித்தான் பிரபல நடிகருக்கு இப்போது பல வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் மாவீரன் படத்தில் வில்லன் மிஷ்கினின் நண்பராக நடித்திருந்த தெலுங்கு நடிகர் சுனில் ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் வெற்றிவாகை சூடிய நிலையில் தற்போது இவரை தேடி ஒட்டுமொத்த கோலிவுட் பிரபலங்களும் படை எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

Also read: இவர்தான் அடுத்து ரஜினியின் இடத்தை பிடிக்கப் போகிறார்.. கே பாலச்சந்தர் கைகாட்டிய அந்த நடிகர் யார் தெரியுமா.?

அதனாலேயே இவர் இப்போது தெலுங்கு சினிமாவை விட தமிழில் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் கார்த்தியின் ஜப்பான் படத்தில் நடித்து வரும் சுனில் விஷாலின் மார்க் ஆண்டனி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்த இரு படங்களும் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் ஈகை, புல்லட் போன்ற படங்களும் இவர் கைவசம் இருக்கிறது. அதில் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நடிக்கும் புல்லட் படத்தில் சுனில் இணைந்திருப்பதை பட குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Also read: ரஜினி கொடுத்த பூஸ்ட் 2ம் பாகத்திற்கு தயாரான நெல்சன்.. இத்தனை படங்களா? என்னடா இது வெறித்தனமா இருக்கே!

அது மட்டுமல்லாமல் இன்னும் சில படங்களிலும் இவர் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். அதிலும் டாப் ஹீரோக்களின் பார்வை இப்போது இவர் பக்கம் திரும்பி இருப்பது நம்ம ஊரு நடிகர்களை கொஞ்சம் கலவரப்படுத்தி இருக்கிறது.

மேலும் சுனில் நடிக்க வந்து 23 ஆண்டுகள் கடந்தாலும் இப்போதுதான் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் வந்த வேகத்திலேயே சூறாவளி போல் ஒட்டுமொத்த படங்களையும் தன் கைவசம் வைத்திருக்கும் இவர் தான் இப்போது கோலிவுட்டின் பிஸியான நடிகராகவும் இருக்கிறார். ஆக மொத்தம் மாவீரன், ஜெயிலர் படத்தால் அடித்த லக் இவருக்கு திருப்புமுனையாக மாறி இருக்கிறது.

Also read: ஜெயிலர் 4வது நாள் வசூலை பார்த்து இந்த வார ரிலீஸையும் தள்ளி போடும் திரையுலகம்.. உலகளவில் ரஜினி செய்த சாதனை

Trending News