Gossip: வாரிசு நடிகரான இவர் ஆரம்பத்தில் ஒரு வெற்றிக்கு தடுமாறினாலும் போக போக தன் திறமையால் முன்னணி அந்தஸ்தை பிடித்தார். எந்த கிசுகிசுவிலும் சிக்காத இவர் ஒரு நடிகையுடன் மட்டும் இணைத்து பேசப்பட்டார்.
கடைசியில் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தியும் உண்மையானது. ஆனால் நடிகரின் அப்பாவுக்கோ இது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. குடும்பம், கட்டுப்பாடு என இருக்கும் அந்த நடிகர் மகனின் காதலுக்கு சிவப்பு கொடி காட்டினார்.
ஆனாலும் பிடிவாதத்தால் காதலில் ஜெயித்த நடிகர் திருமணத்திற்கு பிறகு அடியோடு மாறிவிட்டார். மனைவிக்கு முன்னுரிமை கொடுத்த நடிகர் இப்போது மொத்தமாக குடும்பத்தை விட்டு தனி குடுத்தனம் செய்து வருகிறார்.
மனைவி பேச்சைக் கேட்கும் நடிகர்
இதற்கு காரணம் நடிகரின் மனைவியான அந்த நடிகையின் வேலை தான் என்கின்றனர். மாமனாருக்கும் அவருக்கும் எழுந்த மனஸ்தாபம் தான் தற்போது குடும்பம் பிரிந்து இருப்பதற்கு காரணமாம்.
ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அப்படி கிடையாது என மறுத்து வந்தனர். தற்போது பார்த்தால் நடிகர் மீடியாவில் பேசிய ஒரு விஷயம் அப்பா நடிகரை ரொம்பவும் காயப்படுத்தி இருக்கிறது. மனைவியின் பேச்சை கேட்டு தான் மகன் இப்படி பேசியதாக அவர் வருத்தப்படுகிறாராம்.
இது குறித்து மகனிடமும் அவர் தன் கோபத்தை காட்டியதில் குடும்பத்தில் ஒரு பஞ்சாயத்து வெடித்திருக்கிறதாம். ஏற்கனவே இருக்கிற பிரச்சினை போதாதுன்னு இது வேற புதுசா கிளம்பியதில் என்ன நடக்கப் போகுதோ என கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.