வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்தியன் 2 வசூல் 1500 கோடிப்பே.. கூச்சநாச்சம் இல்லாமல் புழுகி தள்ளும் கமலின் ஜால்ரா

Indian 2: லைக்கா தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 இன்று வெளியாகி உள்ளது. மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இதன் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட நிலையில் இரண்டாம் பாகத்தின் சொதப்பலுக்கு சில காரணமும் இருக்கிறது. அதாவது ஏ ஆர் ரகுமானின் இசை இல்லாதது மிகப்பெரும் குறையாக உள்ளது.

அதேபோல் சங்கர் இன்றைய ஊழலையும் அரசியலையும் இன்னும் ஆழமாக காட்டி இருக்கலாம் என்ற கருத்தும் பரவி வருகிறது. ஒரு வேளை அரசியல் அழுத்தம் காரணமாக அவர் நினைத்ததை காட்சிகளாக எடுக்க முடியாமல் போய் இருக்கலாம்.

இப்படி படத்திற்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் படத்தை பார்க்காமலேயே சில நெட்டிசன்கள் படம் நல்லா இல்லை என கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இதுவும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

கமலுக்கு ஜால்ரா தட்டும் ரோபோ

இது ஒரு புறம் இருக்க கமலின் வெறியர்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே படம் பற்றி பில்டப் கொடுத்து வருகின்றனர். அதில் முக்கியமாக நடிகர் ரோபோ சங்கர் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் அது பற்றி பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் எங்கள் ஆழ்வார்பேட்டை நாயகன் ஐந்தாவது தேசிய விருதுக்கு தயாராகிவிட்டார். ஆஸ்கார் கதவை உடைக்கப் போகிறார். 1500 கோடி வசூல் செய்துவிடும். இனி கமலா சினிமா கமல் சினிமா என புகழ்ந்து தள்ளிவிட்டார்.

அவருடன் நடிகர் வையாபுரியும் படம் பார்க்க வந்திருந்தார். அவரும் படம் பற்றியும் கமல் பற்றியும் ஆகா ஓகோ என பேசியிருந்தார். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா.

கொடுத்த காசுக்கு மேல இப்படி கூவுறீங்க என நெட்டிசன்கள் இதற்கு கமெண்ட் கொடுத்து வருகின்றனர். ஏனென்றால் படத்தில் லாஜிக் குறை, கமலின் மேக்கப் சரியில்லை என்பது போன்ற மைனஸ் பாயிண்ட்களை சினிமா விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இது பட குழுவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதே சமயம் வேகமாக பரவும் நெகட்டிவ் விமர்சனங்களும் ஷாக் கொடுத்து வருகிறது. இந்த சூழலில் கமலுக்கு ஆதரவாக பேசுகிறேன் என இப்படி கூச்சநாச்சம் இல்லாமல் புளுகி தள்ளுவது கொஞ்சம் ஓவராகவே உள்ளது.

இந்தியன் 2க்கு கிடைக்கும் நெகட்டிவ் விமர்சனங்கள்

Trending News