வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோ படத்தில் விஜய்யுடன் மோதப்போகும் நடிகர்.. ஹிண்ட் கொடுத்து சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். அனிரூத் இசையில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ அண்மையில் இணையத்தில் வெளியாகி மாபெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ப்ரோமோ வீடியோவில் விஜய் பகலில், சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ளது போன்றும், இரவில் கத்தி தீட்டி சண்டைக்கு ரெடியாவது போன்றும் விஜய்யின் தோற்றம் காண்பிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் விஜய்யுடன் மோத சொகுசு காரில் படையெடுத்து வரும் நபர்களையும், பாம்பு, தேள், கழுகு உள்ளிட்ட உயிரினங்களையும் காண்பித்து விக்ரம், கைதி படத்தின் தொடர் கதையாக உருவாகியிருந்தது.

Also Read: விஜய்யை ஒட்டுமொத்தமாக முடக்க நினைக்கும் உதயநிதி.. லியோவுக்கு போட்டியாக இறங்கும் பிரம்மாண்ட படம்

இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படத்தின் கதை இதுதான் என்பதை ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளத்தில் கணித்து வரும் நிலையில், லியோ படத்தின் கதாசிரியர் ரத்னகுமார் அண்மையில் பேட்டி ஒன்றை கொடுத்தார். அதில் விஜய்யின் மற்ற படங்களை காட்டிலும் இப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இருக்கும் என்றும், உங்களது எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டு படம் பார்க்க வாருங்கள் எனவும் தெரிவித்தார்.

இவரது பேட்டி வைரலான நிலையில், தற்போது மீண்டும் ஒரு பேட்டி கொடுத்து லியோ படத்தின் முக்கியமான ஹிண்ட் ஒன்றை கொடுத்துள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இப்படத்தை எவ்வளவு சஸ்பென்சாக இயக்க நினைத்தாலும், எப்படியோ வெளியில் பல விஷயங்கள் கசிந்து விடுகிறது. இதை புறக்கணிக்க லோகேஷ் கனகராஜ் முதல் படத்தில் பணிபுரியும் அனைவரும் சைலண்ட்டாகவே இருக்கின்றனர்.

Also Read: ஜவான் படத்தின் கேமியோ ரோலில் விஜய் இல்லை.. அண்ணனை தூக்கிட்டு அர்ஜுனுக்கு போட்ட ஸ்கெட்ச்

ஆனால் இத்திரைப்பட கதாசிரியர் ரத்னகுமாரின் இந்த பேட்டி லியோ படத்தின் மொத்த சஸ்பென்ஸையும் உடைத்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்ட இடத்தில் கதாசிரியர் ரத்னகுமார், லியோ படத்தில் தரமான சம்பவம் உள்ளது என்றும், கமலஹாசனும், விஜய்யும் இணைந்து வரும் காட்சிகள் வேற லெவல் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த பேட்டி வைரலாகியுள்ள நிலையில், லியோ படத்தில் யாரு விஜய்யுடன் மோத போகிறார் என்ற செய்தி ரசிகர்களிடம் பெரும் கேள்வியாகவே இருந்தது. ஆனால் தற்போது அப்படத்தின் கதாசிரியர் இவ்வளவு பெரிய விஷயத்தை கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளார். இது ஒரு புறமிருந்தாலும், கமலஹாசனும், விஜய்யும் ஒன்றாக இணையும் காட்சி, திரையரங்கில் எப்படி இருக்கும் என்பதை நினைத்தாலே புல்லரிக்கும் விதமாக உள்ளது.

Also Read:பல கோடி பிசினஸ் இருக்கும் இடத்தில் நேர்மை இருக்காது.. அஜித், விஜய்யை குத்தி காமிச்ச ஹெச்.வினோத்

Trending News