செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சத்யராஜ் கதாபாத்திரத்தை தட்டி தூக்கிய நடிகர்.. பல வாய்ப்புகள் பறிபோன பரிதாபம்

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு முன்னணி ஹீரோ என்ற இடத்தை பிடித்த சத்யராஜ் தற்போது குணச்சித்திர கேரக்டர்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவர் நடிப்பில் சமீபத்தில் பிரின்ஸ் திரைப்படம் வெளிவந்தது. அதை தொடர்ந்து தற்போது லவ் டுடே திரைப்படம் வெளியாகி உள்ளது.

அந்த திரைப்படத்தில் சத்யராஜின் கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படி சத்யராஜ் தொடர்ந்து இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார். அப்பா கதாபாத்திரம் மட்டுமல்லாமல் ஊர் தலைவர், பஞ்சாயத்து பேசக்கூடிய பெரிய மனுஷன் போன்ற அனைத்து கேரக்டர்களிலும் அவர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Also read:கமலுக்கு வில்லனாக சத்யராஜ் போட்ட கண்டிஷன்.. துண்ட காணும், துணிய காணும் என ஓடிய இந்தியன் 2 டீம்

இப்படி அவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு வர வேண்டிய வாய்ப்புகளையும், அருமையான கதாபாத்திரங்களையும் பிரபல நடிகர் ஒருவர் தட்டி பறித்த சம்பவமும் நடந்துள்ளது. சத்யராஜ் பிசியாக இருந்த சமயத்தில் அவரை அணுக முடியாத இயக்குனர்கள் அவருக்கு பதிலாக நடிகர் பிரகாஷ்ராஜை அந்த கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருக்கின்றனர்.

அதன் பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகளும் பிரகாஷ்ராஜுக்கு சென்றிருக்கிறது. இதனால் நன்றாக சென்று கொண்டிருந்த சத்யராஜின் மார்க்கெட் சற்று தொய்வடைய ஆரம்பித்தது. மேலும் சத்யராஜ் நடிக்க வேண்டிய பல படங்களில் நடித்ததன் மூலம் பிரகாஷ்ராஜுக்கு நல்ல பெயரும் கிடைத்தது.

Also read:சத்யராஜ் கௌரவ வேடத்தில் அசத்திய 5 படங்கள்.. இந்த கேரக்டர்களில் வேற யாரையும் யோசித்து கூட பார்க்க முடியாது

அந்த வகையில் சந்தோஷ் சுப்ரமணியம், தேவ் போன்ற திரைப்படங்களில் முதலில் நடிக்க இருந்தது சத்யராஜ் தான். ஆனால் அவரால் நடிக்க முடியாத நிலையில் பிரகாஷ்ராஜ் அந்த கேரக்டர்களில் நடித்தார். இடையில் தன் குடும்பத்தையும் கவனித்து வந்த சத்யராஜ் அதன் பிறகு முழு நேரமாக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

அதனால் அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்தது. அந்த வகையில் கனா திரைப்படத்தில் அவருக்கு ஒரு அருமையான கதாபாத்திரம் கிடைத்தது. பின்னர் வீட்ல விசேஷம் திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தற்போது வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படமும் சத்யராஜின் சிறந்த நடிப்புக்கு அடையாளமாக இருக்கிறது.

Also read:சத்யராஜ் போல் எல்லா படங்களிலும் தலைகாட்டும் நடிகர்.. சமீபத்தில் கலக்கும் பழைய வில்லன்

Trending News