திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விக்ரம் பட ரோலக்ஸ் வாய்ப்பை தவறவிட்ட நடிகர்.. ரஜினியின் அடுத்த பிரம்மாண்ட படத்தின் வில்லன்

ரஜினி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரும் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தை முடித்த கையோடு இவருடைய அடுத்த படத்திற்கும் தயாராகி விட்டார். இவருடைய அடுத்த படத்தை லோகேஷ் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் தற்போது லியோ படத்தில் முழு நேரமும் பிசியாக இருப்பதால் அதற்குள் வேறு ஒரு படத்தை முடித்து விடலாம் என்று ரஜினி ஜெய்பீம் படத்தின் இயக்குனரான டி.ஜே.ஞானவேலுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. லால் சலாம் படப்பிடிப்பு முடிந்த கையோடு இப்படம் தொடங்க இருக்கிறது. ரஜினி ஏற்கனவே பெரிய ஆசையாக வைத்திருப்பது ஒரு பிரம்மாண்ட படத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான். அதற்கு ஏற்ற மாதிரி ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படம் அதிக வரவேற்பை பெற்று எல்லா பக்கமும் பேசும்படி அமைந்தது. அதனால் இப்படமும் மிகப் பிரம்மாண்டமாக எடுப்பதற்கு எல்லாம் முயற்சிகளும் செய்து வருகிறார்கள்.

Also read: தயாரிப்பாளர்களை பெரியளவில் வாழ வைத்த 6 படங்கள்.. கமலை பார்த்து பொறாமை பட்ட ரஜினி

மேலும் விக்ரம் படத்தில் எப்படி ஒரு ரோலக்ஸ் கேரக்டர் பேசப்பட்டதோ அதே மாதிரி இந்தப் படத்திலும் ஒரு வில்லன் கேரக்டர் பக்காவாக இருக்க வேண்டும் என்று முனைப்புடன் இயக்குனர் இருக்கிறார். அதற்காக இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக விக்ரமிடம் பேசி இருக்கிறார். அவர் முதலில் நான் இதற்கு செட்டாக மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். பிறகு இயக்குனர் கதையே அவரிடம் சொல்லி ஓரளவிற்கு சம்மதத்தை வாங்கி விட்டார்.

இருந்தாலும் விக்ரம் மனதில் மிகப்பெரிய குழப்பம் இருந்ததால் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இவரிடம் போனில் பேசி இருக்கிறார். அதாவது நீங்கள் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தால் ஒரே பேமெண்டில் 50 கோடி தருகிறோம். நீங்கள் தான் இந்த கேரக்டரில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பிறகு சம்பளத்தை கேட்டதும் விக்ரம் தற்போது 95 சதவீதம் நடிக்கலாம் என்று முடிவு எடுத்து விட்டார்.

Also read: அக்கட தேச சந்தானத்திற்கு குவியும் வாய்ப்பு.. சிவகார்த்திகேயன், ரஜினி என எகிறும் மார்க்கெட்

ஏற்கனவே இப்படித்தான் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டருக்கு விக்ரம் தான் நடிக்க வேண்டியது. அதில் அவர் நடிக்க மறுத்ததால் தான் சூர்யா நடித்து கொடுத்தார். ஆனால் படம் வெளியானதில் இருந்து இப்பொழுது வரை ரோலக்ஸ் கேரக்டர் மக்களிடம் எந்த அளவுக்கு ரீச் ஆகி உள்ளது என்று விக்ரமுக்கு நன்றாகவே தெரியும். அதிலிருந்து தற்போது வரை இந்த கேரக்டரை தவற விட்டோம் என்று வருத்தப்பட்டு தான் இருக்கிறார்.

அதனால் ரஜினியின் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தவறவிடாமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஞானவேல், சூர்யாவுக்கு கொடுத்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் இந்தப் படத்தையும் எப்படியும் வெற்றி அடைய வைப்பார் என்ற யோசனையும் விக்ரமுக்கு உள்ளதால் இந்த படத்தின் வில்லன் கேரக்டருக்கு நடிக்க சம்மதம் தெரிவிப்பார். அத்துடன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளிவரும்.

Also read: ரஜினியை திமிரில் திட்டிய வடிவுக்கரசி.. தண்டவாளத்தில் தலையை வைத்து விட்ட சம்பவம்.!

Trending News