Gossip: மூன்றெழுத்து நடிகர் நடிப்பில் படம் வெளியாகி சில வருடங்கள் ஆகிவிட்டது. அவ்வப்போது சில கெஸ்ட் ரோல் செய்து வந்த அவர் கடின உழைப்பை போட்டு நடித்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
இரண்டு வருடத்திற்கும் மேல் ரிஸ்க் எடுத்து உடலை வருத்தி இப்படத்திற்காக நடிகர் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். அதே போல் இயக்குனரும் நடிகர் தன் மீது வைத்த நம்பிக்கையை கட்டிக் காப்பாற்றி இருக்கிறார்.
அதனாலேயே இப்படத்தை தற்போது ஒட்டுமொத்த திரையுலகமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறது. சில காரணங்களால் படம் தள்ளிப் போயிருந்தாலும் வருடத்தின் கடைசி சம்பவமாக இது இருக்கும் என கூறுகின்றனர்.
மூன்றெழுத்து ஹீரோவின் மாஸ்டர் பிளான்
ஏற்கனவே படம் ரெக்கார்ட் பிரேக் செய்யும் என்ற ஒரு பேச்சு இருக்கிறது. அதற்கேற்றார் போல் நடிகரும் இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுக்க வேண்டும் என இப்போது தீயாக புரமோஷன் செய்து வருகிறார்.
தயாரிப்பு தரப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு இறங்கி வேலை பார்த்து வருகிறது. நடிகரின் எந்த படமும் இந்த அளவுக்கு ஆரவாரத்தை ஏற்படுத்தியதில்லை. நடிகர் கூட நம்பர் ஒன் இடத்தை பிடிக்கவே இப்போது முயற்சி எடுத்து வருகிறாராம்.
மாஸ் நடிகர் தன் இலக்கை நோக்கி செல்லும் நிலையில் அந்த இடத்தை பிடிப்பதுதான் நடிகரின் திட்டமாம். இந்த வருடம் வெளியான டாப் ஹீரோக்களின் படங்கள் எதிர்பார்த்த வசூலை அள்ளவில்லை.
அதுவும் நடிகருக்கு சாதகமாக இருக்கும் நிலையில் தற்போது பெத்த கலெக்ஷனை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார். இதன் மூலம் நடிகர் பற்றி நெகட்டிவாக பேசி வந்தவர்கள் இனி ஷட்டப் தான் என கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.