ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஜெய்சங்கரை போல் டிடெக்டிவ் கேரக்டரில் கலக்கிய நடிகர்.. இப்போது ஆள் அட்ரஸ்ஸே தெரியாமல் போன பரிதாபம்

சினிமாவை பொறுத்தவரை சில கேரக்டர்கள் சில நடிகர்களுக்கு தான் அப்படியே பொருந்தும். அப்படி அந்த காலத்தில் பிரபல நடிகராக இருந்த ஜெய்சங்கருக்கு அச்சு அசல் பொருந்திய ஒரு கதாபாத்திரம் தான் டிடெக்டிவ் கேரக்டர். சொல்லப்போனால் இவரை தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் என ரசிகர்கள் அழைத்து வந்தனர். அந்த அளவுக்கு இவர் துப்பறியும் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்திருக்கிறார்.

இவரைப் போலவே அதற்கு அடுத்து வந்த காலகட்டத்தில் ஒரு நடிகர் டிடெக்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி இருக்கிறார். ஆனால் அவர் இப்போது இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார். தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்தாலும் இப்போது ஆள் அட்ரஸ் தெரியாமல் இருக்கின்றனர்.

Also read: ஜெய்சங்கர் போல் விஜய் சேதுபதிக்கு வந்த நிலைமை.. அந்த 2 படத்தால் மொத்த கேரியருக்கும் வந்த சோதனை

அந்த வகையில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த பிரேம் மேனன் இப்போது சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி இருக்கிறார். குரோதம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகரான இவர் அதைத்தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மேலும் புதுப்பிறவி, வீரமணி, அசோகா, குரோதம் 2 ஆகிய திரைப்படங்களை இவர் இயக்கி நடித்தும் இருக்கிறார்.

இந்த படங்கள் அனைத்துமே டிடெக்டிவ் கதாபாத்திரங்கள் கொண்ட கதை ஆகும். அதில் இவர் துப்பறிபவராக நடித்து அசத்தியிருப்பார். இயல்பாகவே இவருடைய அனைத்து திரைப்படங்களும் ஆக்சன் கலந்த திரில்லர் படங்களாக தான் இருக்கும். அந்த வகையில் இவர் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற குரோதம் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் பரவலான விமர்சனங்களை பெற்றது.

Also read: குழந்தை முகத்தை வைத்து ஜெய்சங்கர் மிரட்டிய 5 படங்கள்.. நிஜத்தில் சொக்கத்தங்கமாய் வாழ்ந்த ஜேம்ஸ் பாண்ட்

ஆனால் இவர் கஷ்டப்பட்டு இயக்கி நடித்த திரைப்படங்களின் மூலம் சினிமாவில் இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 2000ம் ஆண்டு குரோதம் 2 திரைப்படத்தை இயக்கிய இவர் எட்டு வருட இடைவெளிக்கு பிறகு அசோகா என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.

ஆனால் அப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு அவர் சினிமாவில் எந்த திரைப்படங்களையும் இயக்கவில்லை. இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே அவ்வப்போது வெளிநாட்டுக்கு பறந்து விடுவாராம். அந்த வகையில் இப்போது சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி இருக்கும் இவர் வெளிநாட்டில் பிசினஸ் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாக கூறுகின்றனர்.

Also read: ஜெய்சங்கரின் குணத்திற்கு அடிமையான 5 நடிகர்கள்.. ஜென்டில்மேனாக வாழ்ந்து சாதித்த கௌபாய் கிங்

Trending News