TVK Vijay: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வேலைகள் அனைத்தும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் தொண்டர்களுக்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அனைவரும் இதில் பிசியாக இருக்கும் சூழலில் தளபதியின் தீவிர விசுவாசியான நடிகர் சௌந்தரராஜா தமிழக முதல்வரை கேள்வி கேட்டு ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதாவது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது.
அதை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, கைது செய்து சிறையிலேயே வைத்திருப்பதன் மூலம் செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க நினைத்தார்கள்.
ஆனால் முன்பை விட உறுதியாய் சிறையிலிருந்து வரும் சகோதரரை வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது என பதிவிட்டு இருந்தார். இதற்கு சௌந்தரராஜா முதல்வர் ஐயா செந்தில் பாலாஜி ஒன்றும் தியாகி கிடையாது.
முதல்வர் போட்ட ட்வீட்
அவர் ஒரு ஊழல் குற்றவாளி. இந்த வழக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை. நீங்களே இப்படி கூறுவது வருத்தம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார். இப்படி தைரியமாக ஒரு கேள்வியை முன் வைத்திருக்கும் இவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிடைத்து வருகிறது.
இது மட்டுமின்றி பல அரசியல் சர்ச்சைகளுக்கும் இவர் குரல் கொடுத்து வருகிறார். ஆனால் இப்போது முதல்வரையே இவர் எதிர்த்து கேள்வி கேட்டுள்ளது இவருக்கு பின் விளைவாக கூட அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அதன் முன்னோட்டமாக தற்போது ஆளும் கட்சியின் தொண்டர்கள் இவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வழக்கு முழுவதுமாக முடிந்தால் தான் குற்றவாளியா இல்லையா என்று தெரியும்.
அதனால் நீங்கள் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என இவரை ரோஸ்ட் செய்து வருகின்றனர். இதற்கு இவர் எந்த பதிலும் கொடுக்காத நிலையில் இந்த விவகாரம் சூடு பிடிக்குமா என்பது விரைவில் தெரியவரும்.