வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஐயோ அந்தப் பழம் புளிச்சிடுச்சு.. ஜோடி போட்ட ஹீரோயினை ரிஜெக்ட் செய்த நடிகர்

பிரபல ஹீரோ ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்தார். அதிலிருந்து தவறை திருத்திக் கொண்டு அடுத்தடுத்த படங்களை வெற்றியாக்கி வருகிறார். இவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

இப்போது நடிகரின் கைவசம் பல படங்கள் உள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு கையெழுத்திட்டுள்ளார் நடிகர். அந்தப் படத்தில் யாரை கதாநாயகியாக போடலாம் என்று யோசித்து ஒரு நடிகையை கூறியுள்ளது தயாரிப்பு நிறுவனம். ஆனால் அவர் வேண்டாம் என்று ஹீரோ ரிஜெக்ட் செய்து விட்டாராம்.

Also Read : திருமண தேவைக்காக வாய்ப்பு கேட்ட நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு 15 நாள் கால்ஷூட் கேட்ட 70 வயசு கிழவன்

காரணம் ஏற்கனவே இரண்டு, மூன்று படங்களில் அந்த நடிகையுடன் ஹீரோ ஜோடி போட்டு நடித்து விட்டார். ஆகையால் இந்த காம்பினேஷன் ரசிகர்களுக்கு பார்த்து பார்த்து புளிச்சிடுச்சு. வேறு ஒரு ஹீரோயினை போடலாம் என்று ஒரு நடிகையை சிபாரிசு செய்துள்ளாராம்.

இந்த விஷயம் அரசால் புரசலாக தயாரிப்பாளர் தேர்வு செய்த நடிகையின் காதிற்கு சென்றுள்ளது. தொடர் தோல்வி கொடுத்து வந்த அந்த ஹீரோக்கு என்னுடைய அதிர்ஷ்டம் தான் ஹிட் படம் கொடுத்தது. இப்போது என்னை தூக்கி விட ஒரு சந்தர்ப்பம் வந்தபோது அதை மறுத்துவிட்டாரே என்ற கவலையில் நடிகை உள்ளாராம்.

மேலும் அந்த படம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பார்ப்போம் என்று சாபம் விடாத அளவிற்கு தனது தோழிகளிடம் நடிகை புலம்பி வருகிறாராம். ஆனால் ஹீரோ அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

Also Read : அந்த ஒல்லி இயக்குனரும் அப்படியா?. நடிகையிடம் தயாரிப்பாளருக்கும் சேர்த்து அட்ஜஸ்மென்ட் செய்ய சொன்ன கேவலம்

Trending News