சினிமாவைப் பொறுத்த வரைக்கும் நிரந்தர வெற்றி என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று. வெற்றி படங்களில் நடித்து உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் கூட சட்டென சறுக்கி பட வாய்ப்புகளே இல்லாமல் காணாமல் போய்விடுவார்கள். அதே போன்று பல வருடங்களாக வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் நடிகர்கள் ஒரே படத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து நினைக்க முடியாத பேரும், புகழுடன் உச்சத்திற்கு சென்று விடுவார்கள்.
நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் நிலைத்து நிற்பது என்பது அவர்களுடைய அனுபவத்தை வைத்து இல்லை. அந்தந்த காலகட்டத்தில் அவர்களுக்கு மார்க்கெட் எப்படி இருக்கிறது என்பதை வைத்துத்தான் வாய்ப்புகள் கூட அவர்களைத் தேடி வரும். ஒரு படத்தில் ஹீரோவுக்கு கதாநாயகியாக நடித்த நடிகை அதிலிருந்து சில வருடங்களுக்குப் பிறகு அதே ஹீரோவுக்கு தங்கையாகவும், அம்மாவாகவும் நடிக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களுடைய மார்க்கெட் தான்.
Also Read:சினிமா எனக்கு கொடுக்காததை சின்னத்திரை கொடுத்தது.. மனம் திறந்து பேசிய சிவகுமார்
அப்படித்தான் நடிகர்களின் நிலைமையும் எக்கச்சக்க படங்கள் நடித்து ஏகப்பட்ட வெற்றிகளை கொடுத்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர்களால் ஜெயிக்க முடியவில்லை என்று வரும் பொழுது ரசிகர்களாலேயே மறக்கப்பட்டு விடுவார்கள். அப்படி பல வருட சினிமா வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான படங்களை நடித்த நடிகர் ஒருவர் தன்னால் மற்ற நட்சத்திரங்களை விட ஜொலிக்க முடியாமல் போனதை பற்றி பேசி இருக்கிறார்.
கோலிவுட் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் சிவகுமார் தான் அந்த நடிகர். 70 களின் காலகட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமாவில் கோலோச்சி கொண்டிருந்தபோது ஒரு குணச்சித்திர கதாபாத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் நூற்றுக்கணக்கான படங்களில் இவர் நடித்தார். ஆனால் இவருக்கு பின்னால் வந்து இவருடைய படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த கமல் மற்றும் ரஜினிகாந்த் இவரை முந்தி விட்டார்கள்.
இதை பற்றி சமீபத்தில் பேசிய சிவகுமார் இப்படி எல்லாம் பேரும் புகழும் அடைவது என்பது அவரவர்களின் தலையெழுத்து என்று சொல்லி இருக்கிறார். மேலும் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய மார்க்கெட் ரொம்பவுமே குறைந்துவிட்டது எனவும் அந்த நேரத்தில்தான் ‘கண்ணுபட போகுதய்யா’ என்னும் படத்தில் விஜயகாந்த்திற்கு அப்பாவாக தான் நடித்ததாகவும் பேசி இருந்தார்.
அந்தப் படத்தில் விஜயகாந்த் உடன் நடிக்கும் பொழுது தான் அவரை விட ரொம்பவே இளமையான தோற்றத்துடன் இருந்ததாகவும், அப்பா கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதற்காக வெள்ளை சாயம் பூசிக்கொண்டு நடித்ததாகவும், அப்போது அவருடைய உறவினர்கள் எல்லோரும் இதைப்பற்றி கேட்டபோது மார்க்கெட் இல்லாத காரணத்தினால் நான் இப்படி நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என்று சொல்லியதாகவும் கூறி இருக்கிறார்.
Also Read:சம்பளத்திற்கு பதில் வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்.. யாரும் செய்யாததை செய்து காட்டிய ரஜினி