ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மூணு முடிச்சால் சிதறிய வாழ்க்கை.. விவாகரத்தால் ஹீரோவுக்கு கிடைத்த விடுதலை

Gossip: பிரபல நடிகரின் விவாகரத்து விஷயம்தான் இப்போது மீடியாவை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் நடிகர் மீது எந்த தவறும் இல்லை என்று செய்திகள் வந்த நிலையில் மனைவி புது குண்டு ஒன்றை போட்டு பிரச்சனையை திசை திருப்பினார்.

நடிகருக்கு பாடகியுடன் தொடர்பு இருப்பதாக சில விஷயங்களும் மனைவி மூலம் மீடியாவுக்கு தெரிய வந்தது. இதனால் நடிகரின் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆனது. ஆனால் இப்போது கசிந்து வரும் விஷயத்தை பார்த்தால் நடிகர் ஐயோ பாவம் என்ற நிலையில் தான் இருந்திருக்கிறார்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி சில வருஷங்கள் சந்தோஷமாகத் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் மாமியாரின் தலையீடு போகப் போக அதிகமானதால்தான் நடிகர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாராம்.

நடிகருக்கு கிடைத்த விடுதலை

மனைவியும் அம்மா பேச்சை கேட்டு செய்தா டார்ச்சர் கொஞ்ச நஞ்சம் கிடையாது. தொட்டதெல்லாம் சந்தேகம் என ஆரம்பித்து நடிகரை உச்சகட்ட மன அழுத்தத்திற்கும் ஆளாக்கி இருக்கிறார். இதனால் ஹீரோ பொறுத்தது போதும் என தற்போது பிரியும் முடிவை எடுத்துள்ளார்.

ஆனாலும் அவரை சும்மா விடக்கூடாது என மனைவி சில வேலைகளை பார்த்து வருகிறாராம். இருப்பினும் நடிகருக்கு நெருக்கமானவர்கள் தற்போது அவருடைய நிலையை வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

அதிலும் மாமியார் மனைவி இருவரும் எந்த அளவுக்கு அவரை டார்ச்சர் செய்தார்கள் என்ற விவரமும் வெளியில் வர ஆரம்பித்துவிட்டது. இதை வைத்துப் பார்த்தால் இந்த விவாகரத்து நடிகருக்கு உண்மையிலேயே பெரிய விடுதலை தான் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.

திருமணத்தால் மரியாதையை இழந்த நடிகர்

Trending News