வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குடிபோதையில் பரிதாபமாக உயிரிழந்த நடிகர்.. மனவேதனையில் துடிக்கும் வெற்றிமாறன்

Director Vettrimaran: பொதுவாகவே வெற்றிமாறனின் மிகச் சிறப்பு அவர் மற்ற யாரையும் பெரிதாக நம்பி எந்த படத்தையும் எடுப்பவர் அல்ல. முழுக்க முழுக்க இவருடைய கதையை மட்டுமே நம்பி அதற்கேற்ற கதாநாயகனே தேர்ந்தெடுப்பதில் மிகவும் திறமைசாலி. அப்படித்தான் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் இவருக்கு மிகவும் பக்கபலமாக இருந்தது இவருடைய உதவியாளர் சரண்ராஜ்.
இவர் வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை மற்றும் அசுரன் படங்களில் துணை நடிகராகவும் நடித்திருக்கிறார். இவருடைய சொந்த ஊரு மதுரவாயில்.

Also read: பக்கா பிளான் போட்டு காய் நகர்த்தும் வெற்றிமாறன்.. மறுபடியும் முதல்ல இருந்தா என அரண்டு போன தயாரிப்பாளர்

நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் கேகே நகர் ஆற்காடு சாலையில் செல்லும் போது ஒரு கார் மோதி பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதில் மிகவும் ஒரு கொடுமையான விஷயம் என்றால் இவர் சரியான முறையில் தான் ரூல்ஸ் பாலோ பண்ணி போயிருக்கிறார்.

ஆனால் இவருக்கு எதிராக வந்த கார் கண்ணா பின்னா என்று ஓட்டியதால் வந்த விளைவால் இவருடைய உயிர் பரிதாபமாக போய்விட்டது. பிறகு இந்த கார் யாருடையது என்ற விசாரித்த பொழுது சாலிகிராமத்தை சேர்ந்த துணை நடிகர் பழனியப்பன் என்று தெரியவந்துள்ளது.

Also read: எல்லா படங்களிலும் வெற்றிமாறன் கைவிடாது தூக்கி பிடித்த நடிகர்.. இன்று வரை பெயரை காப்பாற்றி கொள்ளும் ஜாம்பவான்

இவர் குடித்துவிட்டு காரை ஓட்டியதால் கட்டுப்பாடு இன்றி எதிராக வந்த சரண்ராஜ் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கிறார். இவருடைய அஜாக்கிரதையால் பரிதாபமாக உதவி இயக்குனர் மற்றும் நடிகரமாக இருந்த சரண்ராஜ் என்பவர் உயிரிழந்து விட்டார்.

இதனால் பழனியப்பனை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் சரண்ராஜின் மறைவு திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக வெற்றிமாறனுக்கு மனவேதனையை கொடுத்திருக்கிறது . இவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Also read: கிட்டத்தட்ட 70% முடிந்த 5 இரண்டாம் பாகம் படங்கள்.. தெறிக்கவிடும் வெற்றிமாறன் குமரேசன் கூட்டணி

Trending News