சினிமாவை பொருத்தவரை சில நடிகைகள் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்தாலும் சிலர் அதற்கு சம்மதிப்பதில்லை. இதனால் சினிமா எதிர்காலமே போனாலும் பரவாயில்லை என்று சில நடிகைகள் திறமையால் மட்டுமே முன்னேறி இருக்கிறார்கள். அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்த நடிகைக்கு ஒரு மோசமான அனுபவம் இருந்துள்ளது.
வித்தி mயாசமான சிரிப்பின் மூலம் அடையாளம் காணப்பட்ட அந்த நடிகை சவாலான பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனைத்து ஹீரோக்களுடனும் நடித்த அந்த நடிகை அந்த காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்த பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்தார்.
அப்போது வெளிநாட்டில் சூட்டிங் நடந்திருக்கிறது. அந்த ஹீரோ வெளியில் கௌரவமாக இருந்தாலும் திரைமறைவில் பல லீலைகளை நடத்தியவர். அதனால் அவர் அந்த நடிகையை தனக்கு மட்டுமல்லாமல் சில தொழிலதிபர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த நடிகை முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார். ஒரு ஹீரோயின் தன்னை இப்படி அவமானப்படுத்தி விட்டாரே என்று கடுப்பான அந்த நடிகர் அடுத்து செய்தது தான் கொடுமையின் உச்சகட்டம். அதாவது அந்த நடிகர் சம்பந்தப்பட்ட நடிகை தப்பான வேலை செய்கிறார் என்று சித்தரித்து அவரை பலான கேசில் மாட்டி விட்டிருக்கிறார்.
Also read: வேட்டையாடிய பின் நடிகைகளை கழட்டிவிட்ட நடிகர்.. இப்ப மகளின் வாழ்க்கையில் திருப்பி அடிக்கும் கர்மா
அதன் பிறகு பல கஷ்டங்களை அனுபவித்த அந்த நடிகை ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையையும் இழந்திருக்கிறார். பல திரைப்படங்களில் நடித்து முன்னணியில் இருந்த அந்த நடிகைக்கு இந்த சம்பவத்திற்கு பிறகு எந்த வாய்ப்புகளும் வரவில்லை. இதனால் நொந்து போன அந்த நடிகை பலரிடமும் வாய்ப்பு கேட்டு கெஞ்சி இருக்கிறார்.
ஆனாலும் அந்த நடிகரின் தயவால் அவருக்கு மார்க்கெட்டே காலியானது. அதன் பிறகு சினிமாவை விட்டு முற்றிலுமாக ஒதுங்கிய அந்த நடிகை வெளிநாட்டு மாப்பிள்ளை ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இப்போது அந்த நடிகை வெளிநாட்டில் உயர்ந்த ஒரு அரசாங்க அதிகாரியாக இருக்கிறார்.