வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சினிமாவே வெறுத்து ஒதுக்கிய நடிகர்.. மணிரத்தினம் அசிஸ்டன்ட்க்கு ஏற்பட்ட அவல நிலை

சில நடிகர்களின் ஆரம்பக்கால படங்களைப்பார்க்கும் போது இவர்கள் எல்லாம் ஒரு ரவுண்டு வருவார்கள் என பலரும் ஆஹா ஒஹோ என பாராட்டுவார்கள். ஆனால் யாரு கண்ணுபட்டுச்சோ தெரியாது சில நடிகர்கள் வந்த இடமே தெரியாமல் காணாமல் போனோர் ஏராளம் எனலாம். அதிலும் சில நடிகர்கள் தமிழ் மொழியை மறந்து வேறு மொழியில் நடிக்க போய் விட்டு இங்கு மார்க்கெட்டை இழந்த கதையெல்லாம் உள்ளது.

அந்த வகையில் இயக்குனர் மணிரத்னத்துடன் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்து, பின்னர் நடிகராக களமிறங்கிய நடிகர் ஒருவர் தற்போது தமிழில் வாய்ப்பில்லாமல் ஹிந்தியில் சென்று விடலாம் என்ற கண்ணோட்டத்தில் உள்ளாராம். இயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமாவில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், ஒவ்வொன்றும் தங்கம்,வைரத்துடன் ஒப்பிடும் அளவிற்கு தரமான படங்களாகும்.

Also Read: மணிரத்னம் அறிமுகப்படுத்திய ரத்தினக்கல்.. இளசுகளை கிறங்கடித்த அரவிந்த் சாமியின் 6 வெற்றி படங்கள்

பல நடிகர்கள் இவரது படத்தில் சின்ன காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்குள் நுழைந்த சம்பவங்கள் எல்லாம் உள்ளது. மேலும் இவர் இயக்கத்தின் மீதும் இந்திய சினிமாவில் உள்ள பல நடிகர்கள் ஆர்வம் கொள்வர். மேலும் அவருடன் பணியாற்றும் வாய்ப்புக்காக கூட பல கேமராமேன்கள், டெச்னிஷியன்கள், துணை இயக்குனர்கள் என பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஹீரோவாக நடித்து பிரபலமான நடிகர் தான் சித்தார்த். ஆரம்பத்தில் மணிரத்னத்துடன் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தார். பின்னர் தெலுங்கில் சாக்லேட் பாயாக வலம் வந்த சித்தார்த், அங்கு பட வாய்ப்புகள் குறையவே தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

Also Read: மணிரத்னம் இயக்கத்தில் தோல்வியடைந்த 5 படங்கள்.. யானைக்கும் அடி சறுக்கும் என நிரூபித்த படம்

அரண்மனை 2, சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்த சித்தார்த் கடந்த 2 வருடங்களாக தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். அவ்வப்போது தன் சமூக வலைதள பக்கத்தில் ஏதேனும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து தன் பெயரையே கெடுத்துக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் தற்போது நடிகை அதிதி ராயுடன் லிவிங் டுகெதர் உறவில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது படங்களில் நடித்து இழந்த மார்க்கெட்டை அடைய ஹிந்தி பக்கமாக சென்று விடலாம் என்ற திட்டத்தில் சித்தார்த் உள்ளதாக கூறப்படுகிறது. அறிமுகமான தமிழ் சினிமாவிலேயே தற்போது வரை பேர் சொல்லும் அளவில் படம் நடிக்கவில்லை, தற்போது ஹிந்தியில் சென்று எப்படி தன் மார்க்கெட்டை பிடிப்பார் என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: சித்தார்த் பட வாய்ப்பு தந்தா படுக்கையை பகிர ரெடி.. உச்சகட்ட ஏக்கத்தில் பேசிய நடிகை

Trending News