திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நொண்டி என அசிங்கப்பட்ட நடிகர்.. பல போராட்டங்களுக்குப் பிறகு விஜய் அஜித்துக்கு இணையாக வந்த ஹீரோ

The actor who was shamed as lame: எப்படியாவது சினிமாவிற்குள் நுழைந்து பெரிய ஹீரோவாகி விட வேண்டும் என்று பலரும் ஆசையுடன் கனவு கோட்டை கட்டி வருவார்கள். ஆனால் அப்படி வந்தவர்கள் அனைவரும் சாதித்து இருக்கிறார்களா என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் பலரும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து வாய்ப்புகளை தேடி அலைந்து வெற்றியை பார்த்திருக்கிறார்கள். அப்படி தற்போது விஜய் அஜித்துக்கு இணையாக ஹீரோ என்ற அந்தஸ்தை போராடி பிடித்திருக்கிறார்.

இவர் ஆரம்பத்தில் சினிமாவிற்குள் நுழைந்ததும் பல போராட்டங்களைக் கடந்து நிறைய தோல்விகளை சந்தித்து ரொம்பவே அவமானப்பட்டு இருக்கிறார். அப்படிப்பட்ட இவரை தற்போது ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் என்றால் அதற்கு முழுக்க முழுக்க இவருடைய தன்னம்பிக்கை தான் காரணம். அந்த நடிகர் வேறு யாருமில்லை சியான் விக்ரம்.

அதாவது இவர் புதிய மன்னர்கள் படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது மணிரத்தினம் பம்பாய் படத்தில் நடிக்க கூப்பிட்டு இருக்கிறார். ஆனால் விக்ரம் அந்த நேரத்தில் போக முடியாமல் போய்விட்டது. அதற்கு காரணம் அப்பொழுது அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவருடைய காலில் ரொம்பவே அடிப்பட்டு விட்டது.

Also read: சஞ்சய் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க காரணம்.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

இந்த சூழலில் என்னால் நடிக்க முடியாது என்று வந்த வாய்ப்பை விட்டுவிட்டார். ஏனென்றால் காலில் அடிபட்டதால் நொண்டி நொண்டி நடக்கும் படியாக விக்ரம் நிலைமை இருந்திருக்கிறது. அந்த சூழலிலும் இவர் கமிட்டான ஒரு சில படங்களில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்கிறது. அப்படி இவர் நடிக்கும் போது சினிமாவில் இருக்கும் பலரும் இவரை நொண்டி என்று கேலி கிண்டல் பண்ணி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனாலும் பட்ட அவமானத்தையும் அசிங்கத்தையும் பெருசு படுத்தாமல் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் நடித்துக் கொண்டே வந்தார். அந்த நேரத்தில் இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு சேது. இந்த படத்தின் மூலம் எப்படியாவது முன்னுக்கு வந்து விட வேண்டும் என்று போராடினார்.

ஆனால் அப்போது கூட பைத்தியக்காரன் மூளை இல்லாதவன் என்று பலரும் இவருடைய கேரக்டரை கேலி செய்து வந்திருக்கிறார்கள். இதெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத விக்ரம் உடலை வருத்திக்கொண்டு நடித்து மக்கள் ரசிக்கும் படியான நடிப்பை கொடுத்து அவர்கள் மனதில் இடத்தைப் பிடித்து விட்டார். அதனால் தான் தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார்.

Also read: விஜய்யின் அரசியல்ல நம்பிக்கையே இல்ல.. தளபதிக்கு சப்போர்ட் பண்ணாத நடிகர்களின் லிஸ்ட்

Trending News