திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தளபதி 68ல் முதலாவதாக கமிட்டான நடிகர்.. வெற்றியை எதிர்பார்த்தது குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் வெங்கட் பிரபு

Director Venkat Prabhu: லியோ படத்தை தொடர்ந்து, பெரியதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இவரின் அடுத்த படம் தான் தளபதி 68. அவ்வாறு இருக்க இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகரின் பெயர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

லியோவின் படப்பிடிப்பின் போதே, தன் ஒன்லைன் ஸ்டோரிக்கு விஜய் ஓகே சொன்னதை மிகுந்த பரபரப்பாய் பேசி வந்தார் வெங்கட் பிரபு. இந்நிலையில் தன் பட குழுவினரோடு கதை குறித்த டிஸ்கஷனில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

Also Read: அப்படியே கவுண்டமணியின் நக்கல், தெனாவட்டு பிடிச்ச ஒரே நடிகர்.. ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் கின்னஸ் நாயகன்

இவரின் கஸ்டடி படத்தின் தோல்விக்கு பிறகு இவரின் பெரிய பட்ஜெட் படம் இது என்பதால், தன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதைத்தொடர்ந்து படம் குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தார்.

மேலும் இப்படம் ஜூலை மாதம் படப்பிடிப்பை தொடங்க உள்ளதால், இதில் நடிக்கக்கூடிய ஆர்ட்டிஸ்ட்களின் பெயர்களை வெளியிடாது ஜூலை 15 தேதிக்கு பிறகு தான் செலக்ட் செய்த ஆர்டிஸ்ட் பெயர்களை வெளியிடுவேன் என தளபதி 68 பட குழு கங்கணம் கட்டி வருகிறது.

Also Read: கொள்கையோடு சினிமாவில் களமிறங்கிய 5 நடிகர்கள்.. நிஜ வாழ்க்கையிலும் கடைப்பிடித்த டி ஆர்

இது ஒரு புறம் இருக்க, வெங்கட் பிரபுவை பொறுத்தவரை இவர் இப்படித்தான் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான். மேலும் ஆர்டிஸ்ட் பெயர்களை வெளியிடாததற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் கூறி எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறார். அவ்வாறு இருப்பின், தற்பொழுது முதலாவதாக ஒரு ஆர்டிஸ்ட் கமிட் ஆகி இருக்கிறாராம்.

அதுவும் விஜய்க்கு பரிச்சயமானவர் தான் எனவும், மேலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் வெற்றி கண்டுள்ளது எனவும் கூறிவரும் இவர் தளபதி 68யில் ஜெய்யை நடிக்க வைத்துள்ளாராம். ஜெய் என்பது வெற்றி என்பதால், முதலில் அவர் பெயரை வெளியிட்டாரோ என சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. மேலும் பகவதில் இணைந்த கூட்டணி தற்போது மீண்டும் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கபோவது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

Also Read: சரண்யா பொன்வண்ணனுக்கு 2ம் திருமணம் செய்து வைத்த இயக்குனர்.. முதல் கணவர் யார் தெரியுமா?

Trending News