வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சரியான கதாபாத்திரங்கள் கிடைக்காமல் ஜொலிக்க திணறும் 6 நடிகர்கள்.. 20 வருடங்களை கடந்த விதார்த்தின் விடாமுயற்சி

தமிழ் சினிமாவில் நுழைந்த முதலிலிருந்தே சரியான கதாபாத்திரம் கிடைக்காமல் ஒரு சில நடிகர்கள் எதிர்பார்த்த இடத்தை அடைய முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். தற்போது குறிப்பிட்டிருக்கும் ஆறு கதாநாயகர்களும் திறமையான நடிகர்கள் என்றாலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் படங்களும் அவர்களை வந்தடையும் கதைக்களமும் ரசிகர்களிடம் செல்லுபடியாகவில்லை. இதனால் தற்போது வரை தங்களது வெற்றிக்காக கொண்டிருக்கின்றனர்.

விதார்த்: தமிழ் சினிமாவிற்கு 2001 ஆம் ஆண்டு முதலே வாய்ப்பு கிடைக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறு சில வேடங்களில் நடித்து, அதன் பிறகு ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான திருவண்ணாமலை படத்தில் வில்லனாக ரசிகர்களின் பார்வையில் பட்டார். அதன் பிறகு 2010ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகராக மாறினார். பிறகு விதார்த்துக்கு தொடர்ந்து ஜன்னல் ஓரம், காடு, வீரம், குற்றமே தண்டனை, கொடிவீரன், ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை என பல வாய்ப்புகள் கிடைத்தாலும் அவரை முன்னணி நடிகராக நிலைநிறுத்தும் அளவுக்கு இன்று வரை வெற்றி கிடைக்கவில்லை.

ஸ்ரீ: லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஸ்,ரீ அந்த படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டினார். அதன்பிறகு மிஸ்கின் நடித்து இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தில் தன்னுடைய முரட்டு நடிப்பை வெளிக் காட்டி இருப்பார். இருப்பினும் இந்த ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த ஸ்ரீ, அதன் பிறகு சினிமாவில் தன்னுடைய இருப்பை ஆழமாகப் பதிவு செய்ய தற்போது வரை போராடுகிறார்.

நகுல்: நடிகை தேவயானியின் தம்பியான நகுல், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமாகி, அதன் பிறகு தட்டுத்தடுமாறி காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்கள் இவருடைய நடிப்பில் வரிசையாக வெளி வந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. அதன்பிறகு தற்போது நகுல் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்கிறார்.

ஹரிஷ் கல்யாண்: சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்திலும் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஹரிஷ் கல்யாண், அதன்பிறகு அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், தாராள பிரபு, ஓ மன பெண்ணே என போன்ற படங்களை கொடுத்தாலும் அவரால் டாப் ஹீரோவாக மட்டுமே வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இவர் தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

துருவ் விக்ரம்: நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், பாலா இயக்கத்தில் வெளியான வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால் அடுத்த படத்தில் தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து மகன் திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்தார். அந்தப் படத்தில் இவருடைய நடிப்பு சிறப்பாக பேசப்பட்டாலும் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்பு வராத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதர்வா: நடிகர் முரளியின் மகனான அதர்வா, 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி, இரும்பு குதிரை, சண்டிவீரன், ஈட்டி போன்ற படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தாலும் இவரால் முன்னணி நடிகராக தற்போது வரை மாற முடியாமல் திணறுகிறார்.

இந்த ஆறு கதாநாயகர்களும் தங்களிடம் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் கொஞ்சம் குறைவாக இருப்பதால் அவர்களால் தற்போது வரை தமிழ் சினிமாவில் உச்ச நாயகர்களாக வரமுடியாமல் ஜெயிப்பதற்கான வழியை விடாமுயற்சியுடன் தொடர்ந்து மேற்கொள்கின்றனர்.

Trending News