வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன், அட்ஜஸ்ட்மென்ட் பண்ண முடியாது.. இயக்குனரின் முகத்திரையை கிழித்த நடிகை

சினிமாவை பொறுத்தவரை எத்தனையோ நடிகர் நடிகைகள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், அவர்களை அவ்வளவு சீக்கிரம் மறந்து விடாத அளவுக்கு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுவார்கள். அப்படி ஒரு நடிகை தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி வெளிப்படையாக பேசி இயக்குனரின் முகத்திரையை கிழித்தெறிந்து இருக்கிறார்.

சூப்பர் ஹிட் படத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சியில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் பேப்பரை  ஒரு மாணவி மீது தூக்கி எறிவார். அந்தக் காட்சி இன்றளவும்  பிரபலம் தான். அந்தக் காட்சியில் நடித்த நடிகை சரியாக வாய்ப்பு கிடைக்காமல் ஏகப்பட்ட அவமானத்தை சந்தித்துள்ளார்.

Also Read: கணவனின் கள்ளக்காதல் தெரிந்ததால் முத்தக் காட்சியில் அதிக நெருக்கம் காட்டிய நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா!

அதிலும் டாப் இயக்குனர் ஒருவர் அந்த நடிகையை ஒரு சில காட்சிகளில்  நடிக்க வைக்கிறேன், ஆனால் என்னை அட்ஜஸ்ட்மென்ட் மட்டும் செய்து கொள் என்று வற்புறுத்தி இருக்கிறார். அதுவும் அந்த படத்தில் ரொமான்ஸ் சீன், கவர்ச்சியான உடை, லிப் லாக் கொடுத்து நடிக்கணும் என்றும்  கூறியிருக்கிறார்.

உடனே அந்த நடிகை, ‘நான் என்ன ஹீரோ தங்கச்சியாகவா நடிக்கிறேன். ஏதோ ஒரு சீன்ல வந்துட்டு போயிடுவேன். அதுக்கு வாயோடு வாய் வைத்து முத்தம்  கொடுக்கணுமா! இப்படி எல்லாம் நடிக்கிறதுக்கு உன்னை அட்ஜஸ்ட்மெண்ட் வேற செய்யணுமா!’ என்று இயக்குனரின் பெயரையும் சமீபத்திய பேட்டி ஒன்றில்  வெளிப்படையாக சொல்லி அவருடைய மானத்தை வாங்கி விட்டார்.

Also Read: வாய்ப்புக்காக 70 வயது நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகை.. அப்பவும் பிரயோஜனம் இல்லை

தன்னுடைய திறமைக்கு சரியான வாய்ப்பு கிடைத்திருந்தால், இப்போது இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் புலம்புகிறார். ஏனென்றால் சினிமாவில்  ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்ததால் அவசரப்பட்டு 19 வயதில் காதல் திருமணத்தை செய்து கொண்டு 2 குழந்தைகளுடன் கணவரும் கைவிட்ட நிலையில், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று கண்ணீர் வடிக்கிறார். இப்போது அவருக்கு 50 வயது ஆயிருச்சு, என்னுடைய வாழ்க்கையே போச்சு என்றும் கதறுகிறார்.

Trending News