சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

டாப் ஹீரோவுடன் திருமண கனவு போச்சு.. புலம்பித் தவிக்கும் கிரஷ் நடிகை

நடிகைக்கு சினிமாவில் அதிர்ஷ்டம் இருந்தாலும் திருமணம் என்று வந்தால் ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து வந்து விடுகிறது. ஏற்கனவே தன்னுடன் நடித்த நடிகர் ஒருவருடன் நடிகை நெருக்கமாக பழகி காதலித்து வந்தார். நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் அந்த கல்யாணம் கைகூடாமல் போய்விட்டது.

இதையெடுத்து இனி அந்த நடிகருடன் படங்களில் நடிக்கவே கூடாது என முடிவெடுத்து விட்டார். இதைத்தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைக்க நடிகைக்கு ஜாக்பாட் தான். சம்பளமும் கோடிகளில் குவிக்க நடிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில் தன்னுடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்த ஹீரோவுடன் நடிகைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் அடிக்கடி வெளிநாட்டுகளில் சுற்றி வந்தனர். ஆனாலும் தங்களது காதல் விவகாரம் வெளியில் தெரியாமல் கமுக்கமாக வைத்திருந்தனர். ஆனாலும் இந்த விஷயம் சோசியல் மீடியாவில் லீக் ஆகிவிட்டது.

Also Read : 19 வயதில் தயாரிப்பாளர் கொடுத்த அந்தரங்க டார்ச்சர்.. ஷாக் கொடுத்த நடிகைக்கு கொட்டு வைத்த பயில்வான்

இருந்த போதும் இவர்கள் இருவருமே இதைப் பற்றி எதுவுமே வாயை திறக்காமல் இருந்தனர். சமீபத்தில் நடிகை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அந்த ஹீரோவை காதலிப்பதை ஒற்றுக்கொண்டு உள்ளார். அதுவும் படத்தின் ப்ரமோஷனுக்காக இந்த விஷயத்தை போட்டு உடைத்துள்ளார்.

இதனால் கடுப்பான ஹீரோ நடிகையை இப்போது ரிஜெக்ட் செய்து விட்டாராம். அவர் போன் செய்தால் கூட எடுப்பதில்லையாம். நடிகை எவ்வளவோ சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டாலும் எல்லாம் வீணாகி போய்விட்டது. ஆகையால் நடிகை இப்போது செம அப்சட்டில் இருக்கிறார்.

Also Read : நடிகை லட்சுமியின் முதல் கணவர் இவர்தானா?. அட இது நம்ம தேவயானி அப்பா தான!

Trending News