புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்யுடன் நடிக்க காத்திருக்கிறேன்.. ராஷ்மிகாவைத் தொடர்ந்து ஏங்கும் 18 வயது நடிகை!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தளபதி விஜயின் 66-வது படமான வாரிசு திரைப்படம் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வருகிறது.

வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக விஜயின் தீவிர ரசிகையான ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தற்போது வாரிசு படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இன்னிலையில் தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி விஜய்யுடன் நடிப்பது தனக்கு பல வருட கனவு என கூறியுள்ளார். மேலும் அவருடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் அவருடன் ஒரு சிறிய நடனமாடி விட வேண்டும் என்பது தனது ஆசை என கூறியுள்ளார்.

மேலும்  விஜய் அவர்களை பார்க்கும்போது மிகவும் எளிமையாக இருக்கிறார். யாரிடமும் பேச மாட்டார். ஆனால் படத்தில் மட்டும் எப்படி வசனம், நடனம் என அனைத்திலும் கலக்குகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. அதனால் அவருடன் நடிக்கும்போது அதைப் பற்றி நான் தெரிந்து கொள்வேன்.

மேலும் அவருடன் நடிக்கும் நல்ல அனுபவம் கிடைக்கும் என அதற்காக காத்திருக்கிறேன் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது கீர்த்தி ஷெட்டி, ராம் பொத்தினேனி உடன் ‘தி வாரியர்’ எனும் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். அடுத்தது வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இதன் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி அதன்பிறகு தமிழ் நடிகர்களின் படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெறும் 18 வயதில் முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக மாறி வரும் கீர்த்தி ஷெட்டி தமிழ், தெலுங்கு படங்களில் வரிசையாக கமிட்டாகி கொண்டிருக்கிறார்.

Trending News