புதன்கிழமை, ஜனவரி 8, 2025

எனக்கு இனி யாரும் வேண்டாம்.. காதல் தோல்வியில் புலம்பி தவிக்கும் நடிகை

Gossip: அந்த வாரிசு நடிகையை பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாக தான் இருக்கிறது. அப்பா வழியில் திருமணம் வேண்டாம் என இருந்தாலும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்.

ஆனால் யார் கண் பட்டதோ அவருக்கு எந்த காதலும் செட்டாகவில்லை. வெளிநாட்டு பிரபலம் ஒருவரை காதலித்த அவர் தன் அப்பாவிடம் கூட அவரை அறிமுகம் செய்து வைத்தார்.

பொதுவெளியில் இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்த்த பலரும் எப்ப கல்யாணம் என வெளிப்படையாகவே கேட்டனர். ஆனால் திடீரென என்ன நடந்ததோ இந்த ஜோடி ஆளுக்கொரு பக்கமாக பிரிந்தது.

வாரிசு நடிகையின் காதல் தோல்வி

அதையடுத்து வேறு ஒருவருடன் காதலில் இருந்தார் வாரிசு நடிகை. ஆனால் திடீரென இப்போது இந்த ஜோடி பிரிந்திருக்கிறது. சமீபத்தில் நடிகை அந்த இயக்குனருடன் நடித்த பாடல் வெளியானது.

அதுதான் இந்த பிரிவுக்கு காரணம் என்கின்றனர் சிலர். ஆனால் நடிகையோ இது எதற்கும் விளக்கம் கொடுக்காமல் எனக்குமே இனி யாரும் கிடையாது என விரக்தியில் புலம்பி தவிக்கிறாராம்.

அந்த மன வருத்தத்தில் காதல் தோல்வி பாடலையும் பாடி மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலரும் செல்லம் இப்படி வருத்தப்படலாமா என ஆறுதல் கூறி வருகின்றனர்.

பிரபலங்களின் கிசுகிசு செய்திகள்

Trending News