சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

மீ டூ புகாரை வைத்து குளிர் காய்ந்த நடிகை.. ஆதாரமில்லாமல் சீனு ராமசாமி மீது கக்கப்படும் வன்மம்

Seenu Ramasamy: சோசியல் மீடியா தற்போது அனைவருக்கும் கைக்குள் இருப்பதால் ஒரு விஷயம் நல்லதோ கெட்டதோ அது ஈசியாக நாலா பக்கமும் பரவி விடுகிறது. அதிலும் சினிமா விஷயங்கள் மட்டும் இல்லாமல் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே சிக்கி விடுகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் சீனு ராமசாமி மீது தகுந்த ஆதாரம் எதுவும் இல்லாமல் மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி குற்றச்சாட்டு வைத்து வருகிறார்

அதாவது சீனு ராமசாமி, விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர் என்றே சொல்லலாம். இவர்கள் கூட்டணியில் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்கள் வெளிவந்திருக்கிறது. இதற்கிடையில் இடம் பொருள் ஏவல் என்கிற படம் மட்டும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை மனிஷா யாதவ் கமிட் ஆகியிருந்தார்.

இவர் வட இந்திய நடிகை என்பதால் இவருக்கு கொடுக்கப்பட்ட மலைவாழ் மக்கள் கேரக்டர் பொருத்தமாக அமையவில்லை. இதனால் இந்த கேரக்டருக்கு பதிலாக செகண்ட ஹீரோயின் கதாபாத்திரத்தை கேட்டிருந்திருக்கிறார். ஆனால் அதற்கு இயக்குனர் ஒத்துக்காததால் நடிகை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். அதனால் தான் சீனு ராமசாமிக்கு எதிராக மீ டூ புகாரை அளித்திருக்கிறார்.

Also read: பொம்பள சோக்குனு பகிரங்கமாக பிஸ்மி வச்ச குற்றச்சாட்டு.. சீனு ராமசாமி கொடுத்த பதில் என்ன தெரியுமா?

அதாவது கொடைக்கானலில் இருந்த பொழுது நடிகை மனிஷா யாதவிடம் இயக்குனர் எல்லை மீறி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். அதனால் இந்த இயக்குனரிடம் இனி என்னால் நடிக்கவே முடியாது என்று சொல்லி படத்தில் இருந்து விலகிப் போய்விட்டார். ஆனால் இவர் இப்படி செய்ததற்கு முழுக்க முழுக்க காரணம் இயக்குனர் மீது இருந்த கோபம் தான்.

மற்றபடி இவர் மீது வைத்த புகார்-க்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இதனால் தேவையில்லாமல் இயக்குனர் மீது வீண் பழியை சுமத்தி தன் பெயரை கெடுத்துக் கொண்டார். இது தெரியாமல் மூத்த பத்திரிக்கையாளர்  பிஸ்மியும் ஒரு பக்கத்தில் இருக்கும் நியாயத்தை மட்டுமே தெரிந்து கொண்டு இயக்குனர் சீனு ராமசாமியை பற்றி அவதூறாக பேசிய விஷயம் தான் தற்போது பூகம்பமாக வெடித்து வருகிறது.

Also read: மகனின் போஸ்டர் வெளியீட்டில் கூட கலந்து கொள்ளாத விஜய் சேதுபதி.. உண்மையை மறைக்க முடியுமா.?

Trending News