வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அருண் விஜய்க்கு ஜோடியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ஆண்ட்டி நடிகை.. சினிமாவை மறந்தவருக்கு வாய்ப்பா?

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அவரின் நடிப்பில் சினம், பார்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் அருண் விஜய் பிரபல இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் ஏ எல் விஜய் கடைசியாக தலைவி திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

Also read : வாரிசுகளை சினிமாவை விட்டு ஒதுக்கி வைத்த 5 அப்பாக்கள்.. வயிற்றில் நெருப்புடன் இருக்கும் ஷங்கர்

அதற்குப் பிறகு தற்போது அவர் முதல்முறையாக அருண் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். இந்த படத்தின் ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்க இருக்கிறார். ஏ எல் விஜய் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான எமி ஜாக்சன் அதை தொடர்ந்து 2.0 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

நிறைய பட வாய்ப்புகள் வந்த போதிலும் அவர் அதையெல்லாம் மறுத்துவிட்டு தன் சொந்த ஊரான லண்டனுக்கே சென்றுவிட்டார். அதன் பிறகு திருமணம் ஆகாமலே குழந்தை பெற்று பரபரப்பை கிளப்பினார். தற்போது தன் காதலரை விட்டு பிரிந்து தன் குழந்தையுடன் தனியாக வசித்து வரும் எமி ஜாக்சன் சினிமாவை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டார்.

Also read : தயாரிப்பாளரை 2ம் திருமணம் செய்த சன் டிவி மகாலட்சுமி.. திருமண புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

அப்படிப்பட்டவரை ஏஎல் விஜய் இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வைத்துள்ளார். இதன் மூலம் அவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். அதாவது இந்த படம் முழுக்க முழுக்க லண்டனில் தான் சூட் செய்யப்பட இருக்கிறதாம்.

அதனால்தான் அவர் எமி ஜாக்சனை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார். இருப்பினும் அவர் அருண் விஜய்க்கு பொருத்தமான ஜோடியாக இருப்பாரா என்பது சந்தேகம் தான். மேலும் இவர்களுடைய கெமிஸ்ட்ரி திரையில் எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது ரசிகர்களின் கையில் தான் இருக்கிறது.

ஆனாலும் ஏ எல் விஜய் அந்த கதாபாத்திரத்திற்கு எமி தான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் அருண்விஜய் மற்றும் எமி ஜாக்சன் இருவரின் ஜோடி பொருத்தம் எப்படி இருக்கிறது என்பதை நாம் விரைவில் காணலாம்.

Also read : உதயநிதி, லலித் சொல்லியும் அடங்காத அஜய் ஞானமுத்து.. மொத்தத்தில் அசிங்கப்பட்ட விக்ரம்

Trending News