திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நடிகைக்கு தெரியாமலே 7 முறை நடந்த கருக்கலைப்பு.. ஒன்னுக்கு ரெண்டு வீடு வைத்திருந்த நடிகர்

அரசியலிலும் சினிமாவிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ஒருவருக்கும் பிரபல நடிகைக்கும் கடந்த சில வருடங்களாகவே சோசியல் மீடியாவில் போர்க்களமே நிலவி வருகிறது. அதிலும் இப்போது அந்த நடிகர் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக சோசியல் மீடியாவில் அழுது புலம்புகிறார். இந்த நடிகை ஏற்கனவே கன்னட நடிகர் ஒருவரை 3 ஆண்டுகளாக காதலித்து டேட்டிங் செய்து வந்தார்.

அவரை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்து முடிந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நின்று விட்டது. இதை அடுத்து அந்த நடிகை ஒரு நடிகரின் காதல் வலையில் சிக்கி அந்தரங்க டார்ச்சலை அனுபவித்திருக்கிறார். அதிலும் அரசியல்வாதியாக இருக்கக்கூடிய அந்த நடிகர் ஒருவர் தன்னை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்த பிறகு தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி பரபரப்பு கிளப்பினார்.

Also Read: அறுசுவை பந்திப்போட்டு ஆடம்பர பங்களா வாங்கிய நடிகை.. பெரும்புள்ளிகள் உடன் அடித்த லூட்டி

இந்த விவகாரம் ஒரு முடிவில்லாமல் செல்கிறது. அத்துடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த நடிகை அந்த நடிகரை எப்படியாவது கைது செய்ய வைத்து விடுவேன் என்று சபதம் எடுத்துள்ளார். மாலை மாற்றி நடிகையை திருமணம் செய்து கொண்டு, தாலி கட்ட மறுத்த அந்த நடிகர் சென்னையில் உள்ள பிரபலத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டியிருக்கிறார்.

இந்த திருமணத்தை குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னுடைய மனைவி தனக்கு துணைவி மட்டும் தான், நீ தான் என்னுடைய ஒரிஜினல் மனைவி என்றும் நம்ப வைத்திருக்கிறார். தற்போது என்னிடம் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை, நிச்சயம் அவரை கைது செய்ய வைக்காமல் விடமாட்டேன். அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

Also Read: திருமணமான இயக்குனர் மேல் வந்த வெறித்தனமான காதல்.. கை கூடாததால் விபரீத முடிவை தேடிய நடிகை

அதுமட்டுமல்ல அந்த நடிகைக்குத் தெரியாமல் இதுவரை 7 முறை கருக்கலைப்பு மாத்திரையை அந்த நடிகர் கொடுத்திருக்கிறார். அவருடைய அனுமதி இல்லாமல் கருவை சிதைத்து மட்டுமல்ல நடிகையை தற்கொலைக்குத் தூண்டி உள்ளதாகவும் பத்திரிக்கையாளர்கள் முன்பு அழுது கொண்டே கதறுகிறார்.

அந்த நடிகரிடம் இதைப் பற்றி கேட்டால், ‘எனக்கு பல கோடி கணக்கான குடும்பங்கள் இருக்கிறது. மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் இதைப் பற்றி பேசுவது கேவலமாக இருக்கிறது’ என்று கூலாக பதில் சொல்கிறார்.

Also Read: கம்புக்கு புடவை கட்டினாலும் விடாத நடிகர்.. மலையாள நடிகைக்கு போட்ட வசியம்

Trending News