செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நயன்தாரா, சமந்தா இடத்தை பிடிக்க வரும் அடுத்த ஹீரோயின்.. உலகளவில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை

தென்னிந்திய மொழி படங்களில் தற்போது உள்ள நிலவரப்படி நயன்தாரா மற்றும் சமந்தாவுக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக இவர்களது மார்க்கெட் சற்று குறைந்துள்ளது. அதாவது நயன்தாராவுக்கு சமீபத்தில் வெளியான தமிழ் படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை.

இதனால் நயன்தாரா தற்போது பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அதேபோல் தான் சமந்தாவும் அறிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நிலை அவரது படங்களும் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. அதுவும் கடைசியாக வெளியான சாகுந்தலம் படம் படுமோசமான தோல்வியை அடைந்தது. அதுவும் போட்ட பட்ஜெட்டில் கால்வாசி கூட எடுக்கவில்லை.

Also Read : சிம்புவால் குடிக்கு அடிமையான நயன்தாரா.. முழுசாக மாற்றியது யார் தெரியுமா?

இப்போது நயன்தாரா மற்றும் சமந்தாவை ஓரம்கட்ட ஒரு நடிகை வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு பெல்லி சண்டை என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீ லீலா. இவர் தமாகா படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கு தான் இப்போது நிறைய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

அதாவது முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோருடன் ஜோடி போட்டு நடிக்கிறார். அது மட்டுமல்லாமல் விஜய் தேவர் கொண்டாவின் 12 ஆவது படத்திலும் ஸ்ரீ லீலா நடிக்கிறார். இது தவிர கைவசம் எக்கச்சக்க படங்கள் இருக்கிறது. தற்போது உள்ள நிலவரப்படி உலக அளவில் அதிக படங்களை ஸ்ரீ லீலா தான் வைத்துள்ளாராம்.

Also Read : நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டு அடம் பிடிக்கும் சிங் நடிகை.. வாய் சவடாலால் போன பட வாய்ப்பு

இவ்வாறு சைலன்ட் ஆக அந்த நடிகை வளர்ந்து வருகிறார். சொல்லப் போனால் இன்னும் கொஞ்ச நாளில் நயன்தாரா, சமந்தா இருவரையும் ஸ்ரீ லீலா ஓரம் கட்டி விடுவார் போல. இதனால் தெலுங்கு சினிமாவில் தற்போது உள்ள முன்னணி நடிகைகள் இவர் மீது பொறாமையில் உள்ளனர். ஏனென்றால் டாப் நடிகர்களின் படங்கள் இவருக்கு தான் செல்கிறது.

அதனால் தங்களது பட வாய்ப்புகள் பறிப்போகிறது என்ற வைத்தெரிச்சலில் உள்ளனர். ஆனாலும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு தான் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இன்னும் சில வருடங்களிலேயே தமிழ் சினிமாவிலும் இவர் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Also Read : 40 வயதில் ரீ என்ட்ரி கொடுக்கும் 90ஸ் கனவுக்கன்னி.. அதுவும் நயன்தாராவுக்கு வில்லியாக

Trending News