பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்கள் கொஞ்சம் ஓவராக நடந்து கொள்வது வழக்கம்தான். ஆரம்பத்தில் வாய்ப்புக்காக பம்மிய படி இருக்கும் ஹீரோயின்கள் முன்னணி அந்தஸ்திற்கு வந்தவுடன் தன்னை வளர்த்து விட்டவரையே உதாசீனப்படுத்தி விடுவார்கள். அப்படித்தான் பிரபல நடிகை ஒருவரும் தயாரிப்பாளர் ஒருவரை டீலில் விட்டிருக்கிறார்.
தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு முன்னணியில் இருக்கும் நடிகை ஒருவர் திருமணத்திற்கு பிறகும் கூட பிசியாக நடித்து வருகிறார். அவரை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய இரண்டு படங்களில் நடிக்க கமிட் செய்திருக்கிறார். அதற்காக 20 கோடி வரை சம்பளமாக பேசி அதற்கான செக்கையும் கொடுத்திருக்கிறார்.
Also read: அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்கிய நடிகை.. காலடியில் மயங்கி கிடக்கும் இயக்குனர்
பணத்தை வாங்கிக் கொண்ட நடிகை பிறகு தயாரிப்பாளருக்கான கால்ஷுட்டை மட்டும் கொடுக்கவே இல்லையாம். இத்தனைக்கும் அந்த தயாரிப்பாளர் சில வருடங்களுக்கு முன் நடிகைக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அதாவது அவர் தயாரித்திருந்த ஒரு படத்தில் நடிகை புனிதமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
அதன் மூலம் நடிகையின் மார்க்கெட்டும் உயர்ந்தது. இப்படி தனக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்த அந்த தயாரிப்பாளரையே அவர் அவமதித்து விட்டார். இதை ஏற்க முடியாத அந்த தயாரிப்பாளர் நடிகையின் வீட்டுக்கே சென்று அவரை கேள்வி கேட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் கொடுத்த பணத்தையும் திருப்பி வாங்கிக் கொண்டு இனி என் படத்தில் உனக்கு வாய்ப்பு கிடையாது என்று சொல்லிவிட்டு வந்தாராம்.
தற்போது அந்த கேரக்டருக்கு நடிகையின் போட்டி நடிகை ஒருவரை அவர் புக் செய்ய இருக்கிறாராம். ஏற்கனவே நடிகையின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டு இருக்கிறது. அதில் இந்த விஷயமும் சேர்ந்து கொள்ள தற்போது அவர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறாராம். இப்படியே போனால் நடிகையின் கேரியர் அவ்வளவுதான் என்ற ரீதியில் பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.
Also read: அட்ஜஸ்ட்மெண்டில் இருந்து காப்பாற்றிய நடிகர்.. பின்னர் அவரே அனுபவித்து கசக்கி தூக்கிப் போட்ட பரிதாபம்