வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கேப் விழுந்ததால் வாய்ப்புக்காக திண்டாடும் நடிகை.. சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்ட தயாரிப்பாளர்

சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகைகளே நீண்ட காலம் நிலைத்திருக்க முடியவில்லை. இந்நிலையில் சினிமாவில் சிறுது பிரேக் எடுத்த நடிகை ஒருவர் பட வாய்ப்பு இல்லாமல் அவதிபட்டு வந்தார். தன்னுடன் நடித்த டாப் ஹீரோக்களிடம் சிபாரிசு கேட்டிருந்தார்.

ஆனால் நடிகைக்கு இப்போது மார்க்கெட் இல்லாததால் அவர்களும் கைவிரித்து விட்டனர். இதையடுத்து தயாரிப்பாளரை அணுகி உள்ளார். அந்த தயாரிப்பாளரும் வாரிசு நடிகர்களை மட்டுமே வளர்த்து விட்டு வருகிறார். ஆனாலும் நடிகை சினிமாவில் ஏற்கனவே பரிச்சயமான முகம் என்பதால் கொஞ்சம் கருணை காட்டி இருக்கிறார்.

அதாவது படத்தில் வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்து சம்பளத்தை குறைத்துக் கொள்ள சொல்லியுள்ளார். நடிகையும் தன்னுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு சம்பளத்தை கம்மியாக சொல்லி இருக்கிறார். ஆனால் அதிலும் சில லட்சங்களை குறைத்து இருக்கிறார்.

இப்போது படம் தான் முக்கியம் என்று நடிகையும் தயாரிப்பாளர் கொடுக்கும் சம்மதத்திற்கு ஓகே சொல்லிவிட்டாராம். நடிகை அந்த காலத்தில் இருந்தது போல் உடம்பை ஸ்லிம்மாக ஆக உடற்பயிற்சி கடுமையாக மேற்கொண்டு வருகிறார்.

எப்படியும் இப்போது அவர் கமிட்டாகி உள்ள படம் வெற்றி பெற்றால் அடுத்த படங்களில் பல மடங்கு சம்பளத்தை உயர்த்தி விடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம். அவரது இந்த கற்பனை கோட்டை படம் வெளியானால் தான் நிஜத்தில் நடக்கிறதா என்பது தெரிய வரும்.

Trending News