நடிகை சினிமாவுக்கு வந்த புதிதிலேயே இவர் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார் என்று ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். அதேபோல் நடிகை அபரிவிதமான வளர்ச்சி அடைந்த நிலையில் நடிகர் ஒருவர் மீது காதலில் விழுந்தார். ஆனாலும் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டார். இதனால் பட வாய்ப்பு குறையுமோ என்ற எண்ணம் பலருக்கும் வர தொடங்கியது.
ஆனால் அதன் பிறகும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிகை நடித்து கொண்டிருந்தார். மேலும் சொந்த வாழ்க்கையிலும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருந்த நிலையில் திடீரென நடிகையின் வாழ்க்கையில் சூறாவளி காற்று வீசியது. அதாவது படங்களில் அதிக கவர்ச்சி காட்டக்கூடாது என நடிகைக்கு கணவர் வீடாரிடமிருந்து கண்டிஷன் போடப்பட்டது.
மேலும் நடிகை இதற்கு மறுப்பு தெரிவிக்க வீட்டில் பிரச்சனை பூகம்பம் வெடித்தது. அதோடு மட்டுமல்லாமல் சிறிது நாட்களிலேயே இருவரும் விவாகரத்து செய்துள்ளதாக தகவலும் வெளியானது. அன்பாக இருந்த ஜோடி விவாகரத்து பெற்றது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
ஆனாலும் மனம் தளராத நடிகை சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி வந்தார். அதோடு மட்டுமல்லாமல் அவருடைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நடிகைக்கு ரீதியான பிரச்சனையால் முடங்கிப் போனார். பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த நடிகை சமீபத்தில் ரொமான்டிக் படம் ஒன்றில் நடித்திருந்தார்.
அதில் கதாநாயகனுடன் ஓவர் நெருக்கம் காட்டி நடித்திருந்தார். மேலும் படத்தின் ப்ரோமோஷனுக்கு சென்ற இடத்திலும் இவர்களும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்த செய்தி இணையத்தில் அதிகம் பரவத் தொடங்கியது. இதை அடுத்து நடிகை இப்போது முக்கிய முடிவு ஒன்று எடுத்திருக்கிறார்.
அதாவது இதுவரை தன்னுடைய முன்னாள் கணவரின் டாட்டூவை அழிக்காமல் இருந்தார். இப்போது அந்த ஞாபகம் அவரை மிகவும் வேதனையாக்கி உள்ளது. மேலும் கணவரை மறக்க வேண்டும் என்றால் இந்த டாட்டூவை அகற்ற வேண்டும் என்று இப்போது முடிவெடுத்து அதை அளித்துள்ளார்.