கடந்த வருடம் திரையுலகையே புரட்டி போட்ட ஒரு சம்பவம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் சம்பந்தப்பட்ட நடிகை பயங்கர பதட்டத்தில் இருக்கிறாராம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகையை சுற்றி எப்போதுமே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.
சிறு சிறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருந்த நடிகை கடந்த வருடம் வசமாக ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டினார். பண மோசடி, போதை பொருள் போன்ற வழக்குகளில் சிக்கிய முன்னணி இயக்குனரை தொடர்ந்து இந்த நடிகையும் விசாரணை வளையத்திற்குள் சிக்கினார்.
பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த வழக்கு சில பிரபலங்கள் பக்கமும் திரும்ப ஆரம்பித்தது. இதனால் அக்கட தேசம் ஒரு பதட்ட நிலையில் இருந்தது. ஆனால் சில பல செல்வாக்குகளை வைத்து அந்த பிரச்சனை அப்படியே முடித்து வைக்கப்பட்டது அதனால் பல ரகசியங்களும் மீடியாவுக்கு வராமல் அடங்கி போனது.
Also read : சொகுசா இருக்க ஆசை, அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்ன நடிகையின் அம்மா.. டார்ச்சர் தாங்காமல் ஓடிய சம்பவம்
அதன் பிறகு அந்த நடிகையும் இதையெல்லாம் மறந்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இப்போது கூட நடிகை பரபரப்பாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில் அந்த வழக்கு மீண்டும் பூதாகரமாக கிளம்பி இருக்கிறது. இதனால் அந்த நடிகை கொஞ்சம் ஆடிப் போய் தான் இருக்கிறாராம்.
அவர் மட்டுமல்லாமல் நடிகை இந்த வழக்கில் சிக்கினால் சில முக்கிய புள்ளிகளின் பெயரும் வெளிவரும் என்பதால் சம்பந்தப்பட்டவர்களும் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்த விஷயம் தான் தற்போது திரை உலகில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. மேலும் நடிகை நடித்து வரும் அந்த மாஸ் நடிகரின் திரைப்படம் ஏற்கனவே பிரச்சனையில் தான் இருக்கிறது. இப்போது இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியதை பார்த்து படகுழு மிரண்டு போய் உள்ளதாம்.
Also read : காதலிக்காக போதையை போட்டு இயக்குனரை அடித்த நடிகர்.. மார்க்கெட் போனதால் பிரேக்கப்பில் முடிந்த காதல்