செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ரஜினியுடன் ஆறாவது முறையாக ஜோடி போடும் நடிகை.. ஜெயிலர் 2வில் நெல்சன் சாய்ஸ்

Jailer-Rajini : ரஜினியின் சினிமா கேரியரில் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த படம் என்றால் அது ஜெயிலர் தான். நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூலை வாரி குவித்தது. ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கி இருந்தார்.

இந்த சூழலில் ஜெயிலர் படத்தின் இறுதியிலேயே இரண்டாம் பாகம் உருவாகுவதற்கான அறிகுறி தென்பட்டது. அதன்படி இப்போது நெல்சன் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் கதையை எழுதும் பணியில் இறங்கி இருக்கிறார். மேலும் இப்போது ரஜினியும் பல படங்களில் பிசியாக இருக்கிறார்.

இப்போது ரஜினியின் லால் சலாம் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் முதல் பாகத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் வேறு ஒரு நடிகை நடிக்கிறார்.

Also Read : நயன்தாரா வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்.. சுயமரியாதை காசு கொடுக்குமா, பாலிவுட் வாய்ப்பு முக்கியம் பிகிலு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருக்கிறாராம். நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா தான் நடித்து இருந்தார். ஏற்கனவே சந்திரமுகி, சிவாஜி, தர்பார், அண்ணாத்த என இதுவரை ஐந்து படங்களில் ரஜினியுடன் நயன்தாரா நடித்திருக்கிறார்.

இப்போது ஆறாவது முறையாக ஜெயிலர் 2வில் நடிக்க இருக்கிறார். மேலும் ஜெயிலர் படத்தில் முதல் பாகத்தில் நடித்தது போல மற்ற மொழி பிரபலங்களும் இரண்டாம் பாகத்தில் இடம் பெற இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் யார் என்று விவரம் விரைவில் வெளியாகும்.

Also Read : நயன்தாரா சம்பளதிற்கு ஆப்பு.. அடிமாட்டு விலைக்கு நெட்பிளிக்ஸ் கேட்டதால் அடிபணியும் நயன்தாரா

Trending News