திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லியோ கெஸ்ட் ரோலில் வரும் மலையாள பகவதி.. பால் பப்பாளியை முழு சோற்றில் மறைத்த லோகேஷ்

Leo Movie: மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில்  தயாராகி இருக்கும் அடுத்த சம்பவம் தான் லியோ. வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகைகள் சமீபத்திய பேட்டியில் சுவாரசியமான பல நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

அதிலும் அந்த படத்தில் நடித்துள்ள கவர்ச்சி நடிகை ஒருவரை லோகேஷ் சஸ்பென்ஸாக மறைத்து வைத்துள்ளார். பொதுவாக லோகேஷ் படத்தில் ஒரு சில கேரக்டர்களை வெளியில் சொல்லாமல் தியேட்டரில் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் ஆக இருக்கும் படி செய்வார். விக்ரம் படத்தில் சூர்யா இருப்பது யாருக்கும் தெரியாது, ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு தான் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் வைரலாக பேசப்பட்டது.

Also Read: அடுத்த சார்லி சாப்ளின் இவர்தான்.. நடிப்பை பார்த்து உறைந்து போய் கமல் கொடுத்த பட்டம்

அதேபோல்தான் லியோ படத்திலும் ஒரு சில கேரக்டர்களை லோகேஷ் மறைத்து வைத்துள்ளார். அதிலும் பால் பப்பாளி போல் இருக்கும் கிளாமர் நடிகை லியோ படத்தில் கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதை அந்த நடிகையே சமீபத்திய பேட்டியில், ‘லியோ படத்தில் நான் நடித்திருப்பது வதந்தி இல்லை, 100% உண்மை’ என அடித்துச் சொல்லி இருக்கிறார். லியோ படத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது.

பொதுவாக லோகேஷ் படம் என்றால் எல்லா செலிப்ரட்டிகளும் ஒன்னு ரெண்டு காட்சியில் கெஸ்ட் ரோல் பண்ணிவிட்டு போய்விடுவார்கள். இந்த விஷயத்தை லோகேஷ் துவங்கி வைத்தது இப்போது சினிமாவில் ட்ரெண்ட் ஆகிவிட்டது. லியோ படத்தை குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்டேட்  வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றனர்.  அதிலும் இந்த படத்திற்காக பல நடிகர்கள் புதுசு புதுசா கால் சீட் கொடுப்பார்கள்.

Also Read: பல நூறு கோடிக்கு அந்த சேனலை வாங்கும் விஜய்.. அரசியல் ஆடுபுலி ஆட்டம்னா இப்படி தான் இருக்கணும்

மன்சூர் அலிகான் இடமெல்லாம் கால் சீட் வாங்கி 6 மாதங்கள் கழித்து தான் அவரை நடிக்க  கூப்பிட்டாராம். அதே போல் இப்பொழுது ஒரு முக்கியமான நடிகை கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். அவர் வேறு யாருமில்லை ஜெமினி படம் மூலம்   இளசுகளை சுண்டி இழுத்த கிரண், அதன் தொடர்ச்சியாக வில்லன் அன்பே சிவம், வின்னர் போன்ற படங்களில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு ஹிட் கொடுத்தார்

அதுமட்டுமல்ல  விஜய்யின் திருமலை படத்திலும் மலையாள ஜக்கம்மாவாக ‘வாடியம்மா ஜக்கம்மா’என்ற ஐட்டம் பாடலுக்கு தளபதியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டார். தற்போது 20 வருடங்கள் கழித்து மறுபடியும் அவருடன் லியோ படத்தில் இணைந்து  நடித்துள்ளார்.

Also Read: ஆரம்பமே அமர்க்களப்படுத்திய ஜேசன் சஞ்சய்.. லைக்கா கூட்டணியின் பின்னணி காரணம்

Trending News