சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அனுதாபத்தை வைத்து செய்த பிரமோஷன்.. ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானதால் அப்செட்டில் இருக்கும் நடிகை

சினிமாவில் நீடித்து நிலைக்க வேண்டும் என்றால் அதற்கு சில ராஜதந்திரங்களையும் செய்துதான் ஆக வேண்டும். அப்படித்தான் முன்னணி நடிகை ஒருவரும் தன் படத்திற்காக தீயாக வேலை செய்து வந்தார். உடல் நல பிரச்சனையால் இடையில் கொஞ்சம் பிரேக் எடுத்திருந்த நடிகை தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்.

சிகிச்சைக்கு பிறகு புது உற்சாகத்துடன் வந்திருந்த அந்த நடிகை சமீபத்தில் வெளியான தன் படத்தை மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்தார். இதற்கு முன்பே உடல் நலம் சரியில்லாத போது இப்படித்தான் அவர் லீட் ரோலில் நடித்த படத்திற்கு பிரமோஷன் செய்தார். கண்ணீருடன் அவர் கொடுத்த பேட்டியை பார்த்த பலரும் ரொம்பவும் பரிதாபப்பட்டனர்.

Also read: கடன் வாங்கி நடிகைகளை பந்தாடிய  80ஸ் ஹீரோ.. பணப்பெட்டியை பாதுகாத்து புருஷனை கோட்ட விட்ட மனைவி

அது படத்திற்கும் பக்க பலமாக மாறியது. அதனாலேயே அந்த படம் வசூலிலும் தேறியது. அதே டெக்னிக்கை சமீபத்தில் வெளிவந்த படத்துக்கும் நடிகை பயன்படுத்தி இருந்தார். ஆனால் இதை கண்டுபிடித்த ரசிகர்கள் அவரை வெளிப்படையாகவே கிண்டல் செய்து கலாய்த்தனர்.

அதையும் தாண்டி சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் இயல்பாக பேசியும், அவர்களின் பதிவுகளுக்கு பதிலளித்தும் படத்தை பிரமோஷன் செய்தார் அந்த நடிகை. இப்படி அவர் செய்த ராஜதந்திரங்கள் அனைத்தும் இப்போது பலனளிக்காமல் போய்விட்டது. அதாவது நடிகை பெரிதும் எதிர்பார்த்த அந்த படம் வசூலில் மொக்கை வாங்கி இருக்கிறது.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த நடிகை கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இதுவரை நடிகையின் திரை வாழ்வில் இவ்வளவு மோசமான கலெக்சனை எந்த படமும் சந்தித்ததில்லையாம். இதனால் நொந்து போன நடிகை இப்போது புது தெம்புடன் நடிக்க முடிவெடுத்து இருக்கிறாராம்.

Also read: நடிகையிடம் மயங்கி கிடந்த 57 வயது நடிகர்.. வழக்கம்போல் வேலையைக் காட்டிய ராசி, தெளிந்த போதை

Trending News