வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு.. ரஜினியால் வாழ்க்கை இழந்ததாக புலம்பும் நடிகை

Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என தற்போது உள்ள நடிகைகள் கூட காத்துக் கிடக்கிறார்கள். அதேபோல் தான் அண்ணாத்த படத்திற்காக கீர்த்தி சுரேஷ் நிறைய பட வாய்ப்புகளை தவறவிட்டார். ஆனால் அண்ணாத்த படத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் ரஜினி படத்தில் நடித்த சந்தோஷத்துடன் இருக்கிறார்.

வேறு ஒரு நடிகை தனது சினிமா மார்க்கெட் போக ரஜினியின் படம் தான் காரணம் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் புலம்பி தள்ளி இருக்கிறார். அதுவும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்த படம் படுதோல்வி சந்தித்தது. இதனால் நடிகைக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளே வரவில்லை என்று கூறியிருக்கிறார்.

Also Read : சிம்புவைப் போல 90களில் ரஜினியை சுழற்றி அடித்த கெட்ட நேரம்.. தயாரிப்பாளர்கள் போட்ட முட்டுக்கட்டை

அதாவது இப்போது லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எப்படி எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதை தாண்டி பல மடங்கு அந்த காலகட்டத்தில் ரஜினியின் பாபா படத்திற்கு இருந்தது. மேலும் சூப்பர் ஸ்டாரின் திரை வாழ்க்கையை இப்படம் திருப்பி போடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான பாபா படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் பாபா படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பாபா படத்தில் யாரை கதாநாயகியாக போடுவது என யோசித்துக் கொண்டிருந்தார்.

Also Read : 90களில் சினிமாவை வெறுத்த ரஜினி.. இரண்டாவது இன்னிங்ஸில் சூப்பர் ஸ்டார் கேரியரை தூக்கி நிறுத்திய இயக்குனர்

அந்த சமயத்தில் தமிழில் மார்க்கெட் இல்லாத காரணத்தினால் பாலிவுட் பக்கம் மனிஷா கொய்ராலா சென்றிருந்தார். பாபா படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்க வைக்கலாம் என்று நினைத்து சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தில் ஹீரோயின் ஆக்கினார். ஆனால் படம் எதிர்பாராத விதமாக தோல்வியுற்றது.

காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக பாபா படத்தால் தான் என்னுடைய மார்க்கெட்டை போச்சு என இப்போது மனிஷா கொய்ராலா சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அதுமட்டுமின்றி மனிஷா கொய்ராலா பேசிய இந்த வீடியோவை கேட்ட ரஜினி ரசிகர்கள் நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : ரஜினியை காக்க வைத்து வேடிக்கை பார்த்த வடிவேலு.. புகழ் போதையில் கொஞ்ச நஞ்ச ஆட்டமா!

Trending News