செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இளம் சிட்டால் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்.. காதலன் பேச்சைக் கேட்டு பேக்கப் சொன்ன ஹீரோயின்

நடிகை டாப் ஹீரோக்களின் படங்களில் எல்லாம் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே பிளாப் ஆகி வருகிறது. நடிகையின் ராசி தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று ஒரு புறம் பேசினாலும் அவரின் அழகுக்காகவே ஹீரோக்கள் அந்த நடிகை தான் வேண்டும் என படத்தில் புக் செய்கிறார்கள்.

அதுமட்டுமின்றி நடிகை சமூக வலைத்தளத்தில் வெளியிடும் கவர்ச்சி போட்டோவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சூழலில் பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் நடிகை கமிட்டாகி இருந்தார். ஆனால் இயக்குனர் இவருக்கு போட்டியாக இளம் சிட்டான நடிகையையும் படத்தில் போட்டு இருந்தார்.

Also Read : நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

நடிகை வந்தவுடன் இவரின் மீதான பார்வை படக்குழுவுக்கு குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி தன்னை சில சமயங்களில் அவமானப்படுத்துவதாக நடிகை உணர்ந்திருக்கிறார். இதனால் மனக்குமுறல் தாங்க முடியாமல் இந்த விஷயத்தை தனது காதலனிடம் போனில் கூறியிருக்கிறார்.

நடிகையின் காதலனும் மாஸ் நடிகர் தான். அவர் உடனே பேக்கப் சொல்லிவிட்டு கிளம்பிவிடு என கூறியிருக்கிறார். பெரிய நடிகர் படம் என்று எல்லாம் யோசிக்காமல் காதலன் பேச்சை கேட்டு உடனடியாகவே படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகை சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி விட்டாராம்.

அதன் பிறகு தான் நடிகை கிளம்பிய விஷயம் படக்குழுவுக்கு தெரிய வந்துள்ளது. இவ்வாறு பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில் நடிகையின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியில் உள்ளனராம். ஆனால் நடிகையின் காதலர் மாஸ் நடிகர் என்பதால் எல்லாத்தையும் தான் பார்த்துக் கொள்கிறேன் என ஹீரோயினுக்கு தைரியம் சொல்லி இருக்கிறார்.

Also Read : நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

Trending News