ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

பிரேக்கப் ஆன பிறகு டாப் ஹீரோக்களின் பட வாய்ப்புகளை இழந்த நடிகை.. ஆசைக்கு அடிபணியாததால் நடந்த திடீர் திருமணம்

Gossip: இந்திய திரையுலகில் கொடி கட்டி பறக்கக்கூடிய பேரழகியாக இருந்த அந்த நடிகை, வடக்கிலும் தெற்கிலும் பல ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அதிலும் குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட அந்த நடிகை ஸ்மார்ட் ஹீரோ உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

ஆனால் அதன் பின் அவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, நடிகை ஸ்மார்ட் ஹீரோ உடன் இருந்த காதலை பிரேக் அப் செய்தார். இதனால் நடிகைக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கான மூன்று படங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

திடீரென என்ன நடந்தது என அந்த நடிகை தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். அந்த ஸ்மார்ட் ஹீரோவுடன் மறுபடியும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் மட்டுமே மீண்டும் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். அதோடு தொடர்ந்து பெரிய படங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதால், அதற்கான காரணம் தெரிந்த பின் மிகுந்த குழப்பத்தில் இருந்தார்.

Also Read: பசுந்தோல் போத்திய புலி.. மாற்றுத்திறனாளி நடிகையையும் விட்டு வைக்காத இயக்குனர்

அப்போதுதான் திரையுலகில் செல்வாக்கு மிகுந்த நடிகரின் குடும்பத்திடம் தஞ்சமடைந்து, அந்த குடும்பத்தை சேர்ந்த முன்னணி ஹீரோவை திடீர் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சினிமாவில் சில காலம் நடிக்காமல் இருந்த அந்த நடிகை, இப்போது மறுபடியும் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடிக்கிறார். இன்றும் நடிகைக்கு முன்பிருந்த அதே மார்க்கெட் இருப்பதுதான் ஆச்சரியம்.

ஆனால் இப்போதும் அந்த ஸ்மார்ட் ஹீரோ திருமணமாகி செல்வாக்கு மிகுந்த மருமகளாக மாறிய அந்த நடிகையை ஒண்ணுமே செய்ய முடியாமல் வெறியுடன் இருக்கிறார். ஆனால் அந்த நடிகை சரியான நேரத்தில் செய்துகொண்ட அவசர திருமணத்தின் மூலம் தன்னை எப்படியோ காப்பாற்றிக் கொண்டார்.

Also Read: குளியல் வீடியோவை வெளியிட்டதால் குவியும் பட வாய்ப்பு.. ஜெட் வேகத்தில் எகிறும் நடிகையின் மார்க்கெட்

Trending News