திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

20 வயது மூத்த நடிகரை துரத்தி துரத்தி காதலித்த நடிகை.. திரும்பி கூட பார்க்காத சியான்

தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வெரைட்டி காட்ட வேண்டும் என தன்னையே வருத்திக்கொண்டு நடிப்பவர் தான் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான பின்பும் மகனுக்கே டஃப் கொடுத்துக் கொண்டிருப்பவர் தான் விக்ரம்.

விக்ரமுடன் ஒரு சில படங்களில் மட்டுமே இணைந்து நடித்தாலும் அந்த நடிகையுடன் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும். இதனால் இவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதனாலையே அடுத்தடுத்து இந்த ஜோடியை திரையில் பார்க்க முடியாமல் போனது.

Also Read: குந்தவையிடம் காதல் மயக்கத்தில் இருந்த 5 ஹீரோக்கள்.. மொத்தமாய் அல்வா கொடுத்து ஓடிய ராணா

ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் த்ரிஷா மற்றும் விக்ரம் இருவரும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து நடித்தனர். இதற்கு முன்பு இவர்கள் இருவரும் சாமி, பீமா போன்ற படத்தில் ரொமான்ஸில் தூள் கிளப்பி இருப்பார்கள். அந்த சமயத்தில் த்ரிஷாவிற்கு விக்ரம் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தன்னை விட 20 வயது மூத்த நடிகர் என்பதை எல்லாம் பொருட்படுத்தாத த்ரிஷா, தன்னுடைய விருப்பத்தை விக்ரம் இடம் தெரிவித்திருக்கிறார். தனது காதலை ஏற்று திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் விக்ரம் காதலாவது கத்திரிக்காயாவது என்று த்ரிஷாவை கொஞ்சம் கூட திரும்பிப் பார்க்கவில்லை.

Also Read: கால் சீட் சொதப்பாத 5 நடிகைகள்.. பஞ்சுவாலிட்டிக்காகவே 6 படங்கள் புக்கிங் ஆன ப்ரியா நடிகை

இதனால் மனம் வேதனை அடைந்த த்ரிஷா விக்ரமை பழிக்கு பழிவாங்க வேண்டும் என்று அக்கட தேசத்து இளம் நடிகருடன் பழகி தனது பெயரை கெடுத்துக் கொண்டார். அதை அடுத்து தொழிலதிபர் ஒருவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து, திருமணம் வரை சென்று கடைசியில் கல்யாணம் நடக்காமல் போனது.

இதற்கு காரணம் த்ரிஷாவின் கடந்த கால காதல் உறவு தான் என்று மாப்பிள்ளை வீட்டாரின் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணத்தைப் பற்றி கேட்டால் உயிர் ரசிகர்களுடையது என்று மழுப்பி வருகிறார்.

Also Read: எட்டு டாப் ஹீரோக்களுடன் நடித்த ரியல் லேடி சூப்பர் ஸ்டார்.. 40 வயதில் நயன்தாரா மார்க்கெட்டை பிடிக்கும் நடிகை

Trending News