செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

30 வயது வரை வெறுத்துப் போன அட்ஜஸ்ட்மென்ட்.. சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய குடும்ப குத்து விளக்கு நடிகை

சினிமாவில் உள்ள நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்ததாக வெளிப்படையாக பேட்டியில் கூறிவருகிறார்கள். எல்லாதுறையிலும் இந்த பிரச்சனை இருந்தாலும் சினிமாவை பொறுத்தவரையில் இது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் பட வாய்ப்பே கிடைக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படி ஒரு பிரச்சினையை தான் நடிகை ஒருவர் சந்தித்துள்ளார். தளபதி விஜய்யின் படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்த சில படங்கள் நடித்து இருந்தார். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் சினிமாவை விட்ட விலகி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

Also Read : மிக மட்டமான முன் உதாரணம்.. விஜய் டிவியை விளாசிய சீசன் 6 நடிகை

அதாவது விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் நுழையும் போது அட்ஜஸ்மென்ட் கேட்டுள்ளனர். இதனால் நல்ல பட வாய்ப்புகளை அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் மறுத்துவிட்டாராம். அதன் பின்பு அவருடைய நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.

30 வயதை தாண்டிய ஸ்ருதி ராஜ் அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் சினிமாவில் ஜெயிக்க முடியாது என சீரியல் பக்கம் வந்து விட்டார். அதன் பின்பு தான் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஆபீஸ் தொடரில் நடித்திருந்தார்.

Also Read : 5 சேனலில் குடியரசு தின சிறப்பு படங்கள்.. டிஆர்பி-யை ஏற்ற சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் ஜீ தமிழ்

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு என்ற தொடரில் நடித்து வருகிறார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். இப்போது கல்யாண வயதை கடந்தும் ஸ்ருதி ராஜ் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

இதைப் பற்றி அவரிடம் கேட்கும்போது சினிமாவில் ஆரம்பத்தில் தான் பட்ட கஷ்டங்கள் மற்றும் திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லாத காரணத்தினால் தற்போது வரை சிங்கிளாகவே இருப்பதாக கூறி வருகிறார். மேலும் வெள்ளி திரையில் சாதிக்க முடியாததை ஸ்ருதிராஜ் சின்னத்திரையில் சாதித்துள்ளார்.

Also Read : ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. வாரிசு படத்தை வைத்து பிளான் போட்ட சன் டிவி

Trending News